இந்தியாவிலேயே அதிகப்படியான டெக் ஊழியர்களும், டெக் நிறுவன தலைவர்களும் இருக்கும் முக்கியமான நகரம் என்றால் அது பெங்களூர் தான்.
இப்படியிருக்கையில் பெங்களூரில் நாம் தினசரி பார்க்கும் பெரும்பாலானவர்கள் டெக் ஊழியர்களாக இருப்பது இயல்பான ஒன்று தான், ஆனால் ஸ்டார்ட்அப் கலாச்சாரம் உச்சத்தை தொட்டு இருக்கும் வேளையில் திரும்பும் பக்கம் எல்லாம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனராக உள்ளனர் என்பது தான் இப்போதைய டிரெண்டிங் விஷயம்.

இதை உறுதி செய்யும் வகையில் பெங்களூரில் ஒரு சிறப்பான சம்பவம் நடந்துள்ளது, இது தான் இணையத்தில் தற்போது டிரெண்டிங் ஆன டாப்பிக் ஆக உள்ளது. அப்படி என்ன நடந்தது..?
லின்கிடுஇன் தளத்தில் Akashlal Bathe என்பவர் பதிவு செய்த போட்டோ பெங்களூரின் ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தின் உச்சத்தை பிரதிபலிக்கிறது. ஆகாஷ்லால் பாத்தே தான் குடியிருக்கும் ஒரு ஹவுசிங் சொசைட்டி-யின் வாட்ஸ்அப் குரூப்-ல் ஒருவர் ஏணி வேண்டும் என கேட்ட போது முன்பின் தெரியாத அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார் ஆகாஷ்லால் .
ஏணி குறித்து அந்த அறிமுகம் இல்லாதவரிடம் பேசிய ஆகாஷ்லால், பல விஷயங்கள் குறித்து ஜாலியாக பேசிக்கொண்டு இருந்த போது உதவி கேட்டவரின் ப்ரொபைல் DP-யில் ரேபிடோ லோகோ இருந்துள்ளது. பொதுவாக யாரும் லோகோ-வை தனது DP-யில் வைக்கமாட்டார்கள். இதுகுறித்து ஆகாஷ்லால் கேட்டுள்ளார்.
சில நொடிகள் அவரிடம் இருந்து பதில் வருவதற்குள் ஆகாஷ்லால் அவருடைய பெயரை போட்டு கூகுள் செய்துள்ளார். அப்போது தான் அவர் யாரென்று தெரிந்துள்ளது. ஆகாஷ்லால் ஏணி-க்காக பேசிய நபர் இந்தியாவின் முன்னணி டாக்சி சேவை நிறுவனமான Rapido-வின் இணை நிறுவனர் ஆவார்.
இந்த அதிர்ச்சியில் இருந்த ஆகாஷ்லால்-க்கு, தான் ரேபிடோ நிறுவனத்தின் நிறுவனர் என உறுதி செய்துள்ளார். இந்த சேட்டிங்-ன் ஸ்கிரீன்ஷாட் லின்கிடுஇன் தளத்தில் பதிவிடப்படும் எனவும் அவரிடம் கூறிவிட்டு ரேபிடோ சேவை சிறப்பாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட ரேபிடோ நிறுவனத்தை அரவிந்த் சங்கா, பவன் குண்டுபள்ளி மற்றும் எஸ்ஆர் ரிஷிகேஷ் ஆகிய 3 பேர் சேர்ந்து உருவாக்கினர். இதில் யார் ஆகாஷ்லால் உடன் சேட் செய்தது என தெரியவில்லை. இந்த சம்பவத்தை தான் ஆகாஷ்லால் தனது லின்கிடுஇன் பதிவில் Happens only in #Bangalore என பதிவிட்டு உள்ளார்.

ஒரு காலத்தில் ஊருக்கு ஒரு இன்ஜினியர், ஒரு டாக்டர், ஒரு தொழிலதிபர் என்று இருந்த காலம் மாறி தற்போது பக்கத்துவீட்டுக்காரர் ஒரு நிறுவனத்தின் நிறுவனர் என்ற அளவுக்கு காலம் மாறியுள்ளது. பெங்களூரில் நடக்கும் இதுபோன்ற சம்பவம் அடுத்து 10 வருடத்தில் இந்தியாவில் பல நிறுவனத்தில் நடக்கும்.


Click it and Unblock the Notifications