சமீப காலமாக பலரும் வேலையை விட்டுவிட்டு சுயதொழில் தொடங்கி சாதிப்பதாக நாம் சமூகவலைதளங்களில் காண முடிகிறது. லட்சக்கணக்கிலான சம்பளத்தை விட்டு சுயதொழில் செய்து சாதனை, இயற்கை வேளாண்மை செய்து சாதனை என ஷார்ட்ஸ்களிலும், ரீல்ஸ்களிலும் பார்க்கிறோம். இது போன்ற வீடியோக்கள் நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி நம்மையும் சுயதொழில் செய்ய தூண்டுகின்றன.
வேலைக்கு சென்று சம்பளம் பெறுவதை விட தொழில் செய்து நாலு பேருக்கு வேலை கொடுப்பது கெத்தாக தான் இருக்கும். ஆனால் இதற்கு கடினமான பாதைகளை கடந்து செல்ல வேண்டும் என்பதே உண்மை. வேலையை விட்டுவிட்டு ஒரு சுய தொழில் தொடங்குவது என்பது அத்தனை எளிதான ஒரு காரியம் கிடையாது என்பது தான் உண்மை. சுயதொழில் தொடங்க வேண்டும் என எண்ணுபவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தின் நிதி நிலைமையை கணக்கில் கொள்ள வேண்டும்.

கணேசன் என்பவர் எக்ஸ் தள பக்கத்தில் இது குறித்து தெளிவான பார்வையை தரும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் I quit my job போன்ற வீடியோக்களால் இன்ஃப்ளுயன்ஸ் ஆகி நானும் வேலையை விட்டுவிட்டு சுய தொழில் செய்யப்போகிறேன் என எண்ணுபவர்களுக்கு தான் இந்த வீடியோ என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சுயதொழில் செய்ய விரும்புபவர்கள் தங்களின் குடும்ப நிதி நிலையை ஏன் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறார்.
நாம் சமூகவலைதளங்களில் இயற்கை வேளாண்மை செய்து சாதனை சுயதொழில் செய்து சாதனை என பார்க்கும் நபர்கள் பலரும் ஏற்கனவே நிதி ரீதியாக வலுவாக இருந்திருப்பார்கள் அல்லது குடும்பத்திற்கான நிதியை சேமித்து வைத்து பின்னர் தொழிலுக்கு வந்திருப்பார்கள். இதனை பெரும்பாலானவர்கள் தெரிந்து கொள்ளாமல் நானும் தொழில் செய்கிறேன் என வேலையை விட்டு கடனுக்கு ஆளாகி, தொழிலும் செய்ய முடியாமல் குடும்ப பொறுப்பையும் சுமக்க முடியாமல் தவிக்கின்றனர்.
நாம் சமூகவலைதளங்களில் காணும் வெற்றியாளர்களில் சிலர் வேலையை விடும் போதே அவர்களின் குடும்ப செலவுக்கான வருமானத்தை தயார் செய்து வைத்திருப்பார்கள். ஒரு சிலருக்கு வாடகை வருமானம், முதலீடுகள் மூலம் வருமானம் கிடைக்கும், சிலருக்கு ஏற்கனவே சொந்தமாக நிலம் இருக்கும் அதை வைத்து விவசாயத்தில் இறங்கி இருப்பார்கள். சிலர் வீட்டில் கணவன் சுயதொழில் செய்ய வேலையை விடுகிறார் என்றால் மனைவி நல்ல வேலையில் வருமானம் ஈட்டுபவர்களாக இருப்பார்கள்.
உங்களின் நிதி நிலைமை வலுவாக இருக்கிறது உங்களின் குடும்பம் பெரிய அளவில் உங்களுடைய வருமானத்தை சார்ந்து இல்லை எனும் போது நீங்கள் தைரியமாக வேலையை விட்டுவிட்டு சுய தொழில் செய்ய தொடங்கலாம் அவ்வாறு இல்லாதவர்கள் தயவு செய்து அதில் இறங்க வேண்டாம் என முனைவர் கணேசன் தன்னுடைய பதிவில் அறிவுரை வழங்கி இருக்கிறார்.
இந்த வீடியோவை பகிர்ந்திருக்கும் முனைவர் கணேசன் உங்களுடைய குடும்பம் உங்களுடைய வருமானத்தை நம்பி இருந்தால் குடும்பத்திற்கான அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான செலவுக்கான தொகையை சேமித்து வைத்துவிட்டு நீங்கள் தொழில் செய்ய செல்லுங்கள் என அறிவுறுத்துகிறார். ஒருவேளை உங்களுடைய குடும்பம் உங்கள் வருமானத்தை நம்பி இல்லை எனும் போது நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம் என கூறியிருக்கிறார்.
அவருடைய இந்த வீடியோ பதிவுக்கு பலரும் தங்களுடைய கருத்தினை தெரிவித்துள்ளனர். ஒரு குடும்பத்தில் ஒரு நபர் தான் வருமானம் ஈட்டுகிறார் எனும் போது திடீரென வேலையை விட்டு சுய தொழிலில் இறங்கிவிட முடியாது. ஏனெனில் வீட்டின் அத்தியாவசிய செலவுகள், வீட்டில் இருக்கும் நபர்களுக்கான மருத்துவ செலவு, பிள்ளைகளுக்கான படிப்பு செல்லவில்லை அனைத்திற்கும் பணத்தை தயார் செய்து வைத்திருக்க வேண்டும். கண்டிப்பாக இருக்க கூடிய செலவுகள் இவை என்பதால் இதனை தயார் செய்யாமல் விட்டுவிட்டால் பின்னாளில் பெரிய நிதி சிக்கல் ஏற்படும்.
எனவே வேலைக்கு செல்பவர்கள் , குடும்ப செலவை ஒற்றை ஆளாக சுமப்பவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான குடும்ப செலவுக்கான பணத்தை தயார் செய்துவிட்டு தாராளமாக தொழில் செய்ய தொடங்கலாம் என நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். மேலும் பாசிவ் இன்கம் எனப்படும் மாற்று வழி வருமானங்களை ஏற்படுத்தி வைப்பது சிறந்தது என கூறுகின்றனர்.
சுயதொழில் தொடங்கும் போது அதற்கான முதலீட்டுக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் இருக்கலாம், முன் தயாரிப்பு இல்லாமல் திடீரென தொழிலில் இறங்கினால் தொழில் தொடங்குவதற்கு கடன் வாங்க வேண்டி இருக்கும் , வீட்டு செலவுக்கு கடன் வாங்க வேண்டி இருக்கும் பின்னாளில் இந்த கடனை உங்களின் கழுத்தை நெறிக்க தொடங்கி நிம்மதியை கெடுத்து விடும்.
வேலைக்கு செல்லக்கூடிய நபர்கள் சுயதொழில் செய்ய வேண்டும் என ஆர்வம் இருந்தால் அவர்கள் வேலைக்கு சென்று கொண்டே இந்த சுயதொழிலுக்கான அடித்தள பணிகளை தொடங்க வேண்டும். நாம் செய்ய போகும் தொழில் என்ன, அதற்கு எப்படி திட்டமிடுவது எப்படி நிதி திரட்டுவது என்பதை எல்லாம் வேலை போக மற்ற நேரத்தில் திட்டமிட தொடங்க வேண்டும்.
ஏற்கனவே குறிப்பிட்ட அந்த தொழிலில் இருக்கும் நபர்களிடம் சென்று அறிவுரை கேட்கலாம், சில காலம் அவர்களிடம் பார்ட் டைமாக பயிற்சிக்கு கூட செல்லலாம். இதற்கிடைப்பட்ட காலத்தில் குடும்ப செலவுக்கான பணத்தையும் சேமிக்க வேண்டும். என் குடும்பம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செலவு செய்ய தேவையான தொகை இருக்கிறது, நான் செய்ய போகும் தொழில் குறித்து எனக்கு நல்ல புரிதல் வந்துவிட்டது என்ற நம்பிக்கை வரும் போது மட்டுமே வேலையை விட்டு தொழில் தொடங்குவதில் இறங்க வேண்டும்.
இந்த கால இளைஞர்கள் பலரும் சமூகவலைதளங்களில் வரும் வீடியோக்களை பார்த்து இவர்களே தொழில் செய்து சாதிக்கும் போது என்னால் முடியாதா என எளிதாக எண்ணுகின்றனர். ஆனால் உண்மை நிலவரம் அப்படி கிடையாது. தொழில் தொடங்கினால் உடனே லாபம் வந்துவிடாது அதற்கு குறைந்தது 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். எனவே அவர்கள் செய்து விட்டனர் நான் சும்மாவே இருக்கிறேன் என்ற எண்ணத்தை எப்போதும் மனதில் கொண்டு வரக் கூடாது. நமது கைகளில் ஐந்து விரலும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications