இந்திய ரயில்வே சாமானிய மக்களுக்கும் போக்குவரத்து செலவை மிச்சப்படுத்த பெரிதும் உதவுகிறது. தினமும் மில்லியன் கணக்கான பயணிகள் இந்திய ரயில்வே மூலம் பயணம் செய்கின்றனர். அமைதியான பயணத்தை உறுதி செய்யும் வகையில் பயணிகள் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படலாம். இந்தப் பதிவில் இந்திய ரயில்வே மூலம் பயணம் செய்யும் பயணிகள் தப்பித்தவறியும் செய்யக்கூடாத சில விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
பெரும்பாலான பயணிகள் இரவு நேர பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் உறங்கிக் கொண்டே பயணம் செய்யலாம் என்பதால் தான். எனவே முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் நிம்மதியாக தூங்க வேண்டும் என்று விரும்புகின்றனர். குறிப்பாக இரவு பயணங்களின் போது இந்த விஷயத்தை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

எனவே அனைவருக்கும் அமைதியான மற்றும் வசதியான சூழலை உறுதி செய்வதற்கு இந்திய ரயில்வே இரவு 10 மணிக்கு பிறகு பயணம் செய்யும் பயணிகளுக்கு சில விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
சத்தமான இசை கூடாது: இரவு 10 மணிக்கு பிறகு சத்தமான இசையை வாசிப்பது இடையூறாக கருதப்படுகிறது. அவ்வாறு பிடிபடும் பயணிகளுக்கு அவர் செய்த குற்றத்தை பொறுத்து ரூ.100 முதல் ரூ.500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். முதல் முறை பிடிபட்டால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதே தவறை மீண்டும் மீண்டும் செய்து பயணிகளை தொந்தரவு செய்தால் 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
இரவு பயணத்தின் போது தவிர்க்க வேண்டிய கூடுதல் விஷயங்கள்:
பிரகாசமான விளக்குகள்: இரவில் பயணம் செய்யும்போது பிரகாசமான விளக்குகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் தனிப்பட்ட விளக்குகளை எறிய விடக்கூடாது. ஒரு வேளை தொடர்ந்து இதே தவறை செய்தால் டிடி பயணிகளை அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கச் சொல்லும் அதிகாரமும் உள்ளது.
புகை பிடிக்க தடை: இந்திய ரயில்வே முன்பதிவு செய்தாலும் அல்லது முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளிலும் புகை பிடிப்பதற்கும், மது அருந்துவதற்கும் கடுமையான தடையை விதித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைதியான சூழலை பராமரிக்க ரயில்வே ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபற்றக்கூடிய பொருட்கள்: தீபாவளி பண்டிகை வர இருப்பதால் பலரும் பிற இடங்களில் இருந்து பட்டாசுகளை வாங்கி எடுத்து வருவார்கள். ஆனால் ட்ரெயினில் எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளின் படி அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வோர் பிடிபட்டால் ரயில்வே சட்டத்தின் 164-வது பிரிவின் கீழ் கடுமையான அபராதம் மற்றும் தண்டனை வழங்கப்படும். 1,000 ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த விதிகளை மதித்து நடப்பது அனைவருக்கும் வசதியான பயணத்தை உறுதி செய்கிறது. நீங்கள் இரவு ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால் அபராதங்களை தவிர்க்கவும் இனிமையான பயண அனுபவத்தைப் பெறவும் இந்த விதிமுறைகளை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications