இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் தங்கள் முதலீடுகளைத் தொடர்வதில்லை என்று சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாட்டில் நீண்ட கால முதலீட்டின் நிலை என்ன? என்பது குறித்த தகவல்களை இதை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் SIP-கள் காலப்போக்கில் செல்வத்தை உருவாக்கும் சிறந்த வழியாகப் பார்க்கப்பட்டாலும், நிஜம் சற்று வேறுபட்டிருக்கிறது.
ஏனெனில் மூன்று வருடங்களுக்கு மேலாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். இந்நிலையில் எஸ்ஐபி முதலீடுகள் குறித்து விஸ்டம் ஹேட்ச் என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அக்ஷத் ஸ்ரீவஸ்தவா சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

தனது X பதிவில் அக்க்ஷத் ஸ்ரீவஸ்தவா, "பள்ளி கட்டணம் அல்லது அவசரகால மருத்துவச் செலவுகளுக்கு நீங்கள் செய்யும் முதலீட்டை எடுக்க வேண்டிய அவசியம் இல்லாத போது தான் நீங்கள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய முடியும்" என்று எழுதியிருந்தார்.
நீண்ட கால முதலீடு என்பது நிதி ரீதியாக நிலையானவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று. ஏனெனில் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினருக்கு பணம் தேவைப்படும்போது செய்யும் முதலீடுகளை முன்னரே எடுத்து விடுகின்றனர். இதைத்தான் அக்க்ஷத் ஸ்ரீவஸ்தவா தனது X பதிவிலும் குறிப்பிட்டிருந்தார். அதோடு பெரும்பாலான மக்கள் இதை செய்யாமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மியூச்சுவல் ஃபண்டின் கடந்த கால செயல்திறன் குறித்து கூறிய அவர், 2000 முதல் 2010-ஆம் ஆண்டு வாக்கில் இந்திய பங்குச் சந்தைகள் 5.5 மடங்கு வரை உயர்ந்தது. இந்த காலகட்டத்தில் முதலீடு செய்தவர்கள் எதிர்பாராத வகையில் வருமானம் பெற்றனர். 2011 முதல் 2019-ஆம் ஆண்டில் வளர்ச்சி குறைவாக இருந்தது. 8 ஆண்டுகளில் சுமார் இரண்டு மடங்கு மட்டுமே சந்தை வளர்ச்சி ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் எஸ்ஐபி முதலீடு செய்தவர்கள் மிதமான வருமானம் பெற்றனர். ஒவ்வொரு ஆண்டும் 9 முதல் 10 சதவீதம் வரையில் வருமானம் பெற்றனர்.
அதன் பின் 2020 முதல் 2025-ஆம் ஆண்டில் கோவிட் தொற்று நோய் ஏற்பட்ட பிறகு சந்தைகள் மூன்று மடங்கு வரை உயர்ந்தன. இந்த காலகட்டத்தில் எஸ்ஐபி தொடங்கியவர்கள் சிறந்த வருமானத்தை பெற்றனர்.
ஏனெனில் 2014 ஆம் ஆண்டில் எஸ்ஐபி தொடங்கிய ஒருவர் 2020 ஆம் ஆண்டில் எஸ்ஐபி தொடங்கியவரை காட்டிலும் ஆறு வருட வருமானத்தை இழந்திருப்பார். அதாவது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்திருந்தாலும் சரியான சந்தை நிலையில் முதலீடு செய்யாமல் இருந்தால் வருமானம் குறைவாகத்தான் இருக்கும். இப்போது 2025 ஆம் ஆண்டில் உங்கள் எஸ்ஐபி பயணத்தை தொடங்க இருந்தீர்களானால் தவறான முதலீட்டு அறிவுரைகளில் ஏமாந்து விடாதீர்கள்.
5 ஆண்டு எஸ்ஐபி, 7 ஆண்டு எஸ்ஐபி, 10 ஆண்டு எஸ்ஐபி, 20 ஆண்டு எஸ்ஐபி, இந்த கால அளவுகள் அனைத்தும் லாபத்திற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சந்தையை மதிப்பீடு செய்து சரியான நேரத்தில் முதலீடு செய்வது முக்கியம். கண்மூடித்தனமான முதலீட்டாளர்களாக இருக்கக் கூடாது. சந்தை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து உங்களுக்கு தெரியாமல் இருந்தால் அதை கற்றுக்கொள்ள நேரம் ஒதுக்குங்கள். உங்கள் மூளையை பயன்படுத்துங்கள்! கடவுள் அனைவருக்கும் மூளையை கொடுத்திருக்கிறார். வெறும் கால அளவுகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் சந்தை நிலையைப் புரிந்து கொண்டு முதலீடு செய்வது நல்லது என்று எழுதியிருந்தார்
அதோடு அக்க்ஷத் ஸ்ரீவஸ்தவா ஒரு ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்திருந்தார். அதில் ஒரு வருட முதல் 25 வருடம் வரை எஸ்ஐபி முதலீடு செய்தவர்களின் லாப விகிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் பார்த்தாலும் குறைந்த வருடங்களுக்கு முதலீடு செய்யும் போது அதிக லாபத்தை காண முடிகிறது. அதேபோல நீண்ட காலமாக இருந்தாலும் லாப விகிதம் குறைவாக இருப்பதையும் காணமுடிகிறது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தான் இந்த வருமானம் இருக்கும் என்பதும் அந்த ஸ்கிரீன் ஷாட்டில் இருந்து தெரிய வருகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications