பரபரப்பான சாலைகளையும், நெரிசலான போக்குவரத்தையும் கடந்து செல்ல ஸ்கூட்டர் போன்ற இரண்டு சக்கர வாகனங்கள் தான் சிறந்தத் தீர்வு. ஆனால், நடுத்தர வர்க்க மக்கள் அல்லது மாணவர்கள் இவற்றை வாங்குவதற்கு சிரமப்படக் கூடும். உங்கள் கனவு வாகனத்தை சொந்தமாக்குவதற்கு நீங்கள் இரண்டு சக்கர வாகனக் கடனைப் பெறலாம். அதன் முழு விவரங்களைப் பற்றி எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.
இரண்டு சக்கர வாகனக் கடன் என்றால் என்ன?: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உங்கள் ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிளைச் சொந்தமாக்குவதற்கான கனவை நிறைவேற்றுவதற்கு 2 சக்கர வாகனக் கடனை வழங்குகின்றன. இந்த இரண்டு சக்கர வாகன கடனுடன், நீங்கள் ஒரு தொகையை கடன் வாங்கி, எளிதான மாத தவணைகள் (EMIs) மூலம் திரும்பச் செலுத்தலாம், இது உங்கள் வாகன செலவை பட்ஜெட்டுக்கு ஏற்றதாக மாற்றுகிறது.

இரண்டு சக்கர வாகன கடன் பெறுவதன் நன்மைகள்:
EMI தவணை முறைகள்: உங்கள் மாத வருமானத்திற்கு ஏற்ப மாத தவணைகளை (EMIs) செலுத்தும் வகையில், 12 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரையிலான கடன் காலத்தை தேர்வு செய்யக்கூடிய கடனாக வாகனக் கடன்கள் வழங்கப்படுகின்றன.
மின்சார வாகனங்களுக்கான சிறப்பு கடன்: சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்காக ப்ரெத்யேகக் கடன்கள் வழங்கப்படுகிறது. EV வாகனம் வாங்க வேண்டும் என்று நினைப்போர், இதுபோன்ற சலுகைக் கடன்களை வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
வாகனக் கடனின் வகைகள்: இரண்டு வகையான வாகனக் கடன் வகைகள் உள்ளன. அவை செக்யூர்டு லோன் (Secured Loans) மற்றும் அன்-செக்யூர்டு லோன் (Unsecured Loans).
செக்யூர்டு லோன் (Secured Loans): இந்த வகைக் கடனில், குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற, உங்கள் வாகனத்தை அடமானமாக வங்கிக்கு வழங்க வேண்டும். ஆனால், இதில் ஒரு சிக்கல் உள்ளது. நீங்கள் தவணைத் தொகையை செலுத்தத் தவறினால், அடமானமாக வைத்த வாகனத்தை வங்கி பறிமுதல் செய்யும் உரிமை பெற்றிருக்கும்.
அன் செக்யூர்டு லோன் (Unsecured Loans): இந்த வகைக் கடனுக்கு அடமானம் தேவை இல்லை. இது வசதியானதாக இருந்தாலும், வட்டி விகிதம் சற்று அதிகமாக இருக்கலாம்.
இரு சக்கர வாகனக் கடனுக்குத் தேவையான தகுதி: நீங்கள் இரு சக்கர வாகனக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளீர்களா.. என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் 21 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், நீங்கள் சம்பளம் பெறுபவர் அல்லது சுயதொழில் செய்பவராக இருக்க வேண்டும். உங்களுடைய குறைந்தபட்ச கிரெடிட் ஸ்கோர் 700 அல்லது அதற்கு மேல் தேவை. நீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
இரு சக்கர வாகனக் கடனுக்கு தேவையான ஆவணங்கள்: புகைப்படம், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட், வங்கி அறிக்கைகள், சமீபத்திய சம்பளச் சீட்டு போன்ற உங்கள் அடையாளம், முகவரி மற்றும் வயதை உறுதிப்படுத்தும் சரியான ஆவணங்கள் இதற்குத் தேவைப்படலாம்.
EMI தொகையை எவ்வாறு கணக்கிடுவது?: இரு சக்கர வாகனக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், உங்களின் EMI தொகையைக் கணக்கிடுவது மிகவும் முக்கியம். நீங்கள் EMI தொகையைக் கணக்கிட இந்த 2 வழிகளைப் பின்பற்றலாம், இது சரியான நேரத்தில், உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த உதவும்.
1. கீழ்கண்ட ஃபார்முலாவை நீங்கள் பயன்படுத்தலாம்
EMI = P x R x (1 + R)^N / [(1 + R)^N - 1],
P என்பது கடன் தொகை, R என்பது வட்டி விகிதம் மற்றும் N என்பது மாதங்களில் கடன் தவணைக் காலத்தைக் குறிக்கிறது.
இரு சக்கர வாகன கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்துதல்: நீங்கள் வாங்க இருக்கும் கடன் தொகை, வட்டி விகிதம் மற்றும் கடன் காலம் ஆகியவற்றை என்டர் செய்ய வேண்டும், மேலும் கால்குலேட்டர் துல்லியமான EMI தொகையை உடனடியாக உங்களுக்கு காண்பிக்கும்.
மேற்கண்ட அனைத்து தகவல்களையும் கருத்தில் கொண்டு, எந்த வங்கியில் சிறந்த வட்டி விகிதம் வழங்கப்படுகிறதோ, அந்த வங்கியை தேர்வு செய்து கடன் பெறலாம்.
More From GoodReturns

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?



Click it and Unblock the Notifications