நாளுக்கு நாள் பணம் வீக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நுகர்வோர் பொருட்கள் முதல் பிற பொருட்கள் வரை அனைத்திலும் விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. அப்படித்தான் மாருதி சுசூக்கி கார்களின் விலையும் ஜனவரி, 2025 முதல் உயரவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகரித்து வரும் கார் பார்ட்ஸ்களின் செலவுகள் மற்றும் செயல்பாட்டு செலவுகளின் காரணமாக மாருதி சுசுக்கி இந்தியா லிமிடெட் தனது கார் மாடல்கள் முழுவதுக்கும் 2025-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் விலையை உயர்த்துவதாக அறிவித்தது. இந்த விலை உயர்வு 4 சதவீதம் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிக்கையை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வாகன உற்பத்தி துறையில் முன்னணியில் இருக்கும் மாருதி சுசூக்கி செலவுகளை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே தங்கள் செயல்பாடுகளை சரி செய்து, தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பாளராக இருக்கும் மாருதி சுசூக்கி நிறுவனம் நவம்பர் மாதத்தில் அதிகமான கார் விற்பனையை செய்து வலுவான வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 1,41,312 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது நவம்பர் மாதம், 2023 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட 1,34,158 வாகனங்களைவிட குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். அக்டோபர் 2024-ஆம் ஆண்டு மாருதி சுசூக்கி 1,59,591 வாகனங்களை விற்பனை செய்தது. அக்டோபருடன் ஒப்பிடுகையில் கடந்த நவம்பர் மாதம் சற்று குறைவான வாகனங்களே விற்பனை செய்யப்பட்டது.
நவம்பர் மாதம் 2024-ஆம் ஆண்டில் மாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டெட் மொத்தமாக 1,81,531 வாகனங்களை விற்பனை செய்தது. இதில் உள்நாட்டு விற்பனை 1,44,238 வாகனங்களும், உபகரண உற்பத்தியாளர்களுக்கு 8,660 வாகனங்களும், ஏற்றுமதிக்காக 28,633 வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மாருதி சுசூக்கி நிறுவனம் போன்றே பிற வாகன பிராண்டுகளும் விலை உயர்வை அறிவித்துள்ளன. டிசம்பர் 5-ஆம் தேதி அன்று ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் அதன் 2025-ஆம் ஆண்டின் வாகனங்களில் 25,000 ரூபாய் வரை விலை உயர்வை அறிவித்தது. இந்த விலை உயர்வு ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அதிகரித்து வரும் முதலீடுகள், தளவாடச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள் போன்றவற்றின் காரணமாகவே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக டிசம்பர் 2-ஆம் தேதி அன்று ஆடி இந்தியாவும் இதே போன்ற காரணங்களை கூறி அதன் வாகனங்களுக்கு 3 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications