2023 ஆம் ஆண்டில் உலக மக்களில் பெரும் பகுதியானாராக இருக்கும் மாத சம்பளக்காரர்களை அதிகம் பயப்பட்ட விஷயம் என்றால் இது பணிநீக்கம் தான். அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா முதலில் சிறிய சிறிய நிறுவனங்கள் வரையில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
இந்த நிலை வருடத்தின் கடைசியிலும் வந்துள்ளதாகத் தெரிகிறது, சில நாட்களுக்கு முன்பு Ernst & Young நிறுவனம் செலவுகளைக் குறைப்பதற்காக வருடத்திற்கு 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சம்பளம் வாங்கும் 130 பார்ட்னர் பதவியில் இருக்கும் ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கியது. இந்த ஒரு நடவடிக்கையின் மூலம் சுமார் 130 மில்லியன் டாலர் தொகையைச் சேமித்தது.

இந்த நிலையில் ஜீரோதாவின் இணை நிறுவனர் நிகில் காமத் மற்றும் அனாகாடமியின் கௌரவ் முன்ஜால் மற்றும் ரோமன் சைனி ஆகியோரின் முதலீட்டை பெற்ற இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் காஃபி செயின் பிராண்டான 'தேர்ட் வேவ் காபி' சுமார் 100-120 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
பெங்களூருவை தளமாகக் கொண்டு ஸ்டார்ட்அப் நிறுவனமாக இயங்கி வரும் இந்தத் தேர்ட் வேவ் காபி பிராண்ட் சில மாதங்களுக்கு முன்பு தான் Creaegis, வெஸ்ட்பிரிட்ஜ் கேபிட்டல் மற்றும் Udaan நிறுவனத்தின் சுஜீத் குமார் ஆகியோரிடம் இருந்து 35 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியது. அதற்குள் இத்தகைய பணிநீக்கம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் இரண்டு மிச்சிகன் கார் தொழிற்சாலைகளில் 1,300 தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதாக இந்நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஓரியன் அசெம்பிளி ஆலையில் 945 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்த ஜெனரல் மோட்டார்ஸ், இத்தொழிற்சாலையில் செவ்ரோலெட் போல்ட் EV உற்பத்தியை நிறுத்திவிட்டு 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எலக்ட்ரிக் டிரக் உற்பத்திக்காக மாற்றப்படும் என்றும் அமெரிக்காவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இதேபல் Chevrolet Camaro உற்பத்தி செய்யும் Lansing Grand River தொழிற்சாலையில் சுமார் 350 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications