இன்றைய இளைஞர்கள் பெரும் தொகையை சம்பளமாக பெற வேண்டும் என்பதை காட்டிலும், சொந்தமாக தொழில்துவங்க வேண்டும் என்பதில் குறியாய் உள்ளனர். இப்படி வெளிநாட்டிலும், பெரும் கார்பரேட் பணியில் இருந்து வர்த்தகம், நிர்வாகம், மார்கெட்டிங், டிமாண்ட் போன்ற வர்த்தகத்திற்கு தேவையான முக்கியமான விஷயங்களை கற்றுக்கொண்டு துவங்கும் வர்த்தகம் பெரும் வெற்றி அடைந்து வருகிறது.
அப்படி டீ விரும்பிகள் அதிகமாக இருக்கும் இந்தியாவில் அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ், டாடா குழுமத்துடன் இணைந்து பெரும் முதலீட்டை செய்து ஒவ்வொரு மாதமும் பல நூறு கோடி வருமானத்தை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் ஸ்டார்பக்ஸ் காஃபி வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில் இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாகி வருகிறது.

பெங்களூருவை தளமாகக் கொண்ட காபி மற்றும் உணவுப் பிராண்டான தேர்ட் வேவ் காபி 2016 இல் தொடங்கப்பட்ட, இப்போது ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு இந்தியப் போட்டியாளராக மாறியுள்ளது. இந்தியாவில் QSR பிரிவு வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் தேர்ட் வேவ் காபி பல முதலீட்டாளர்களின் செல்ல குட்டியாக மாறியுள்ளது.
தேர்ட் வேவ் காபி பிராண்டின் USP என்வென்றால் இந்தியாவில் கிடைக்கும் சிறப்புமிக்க காபியை இந்திய மக்கள் அனைவரும் அணுகக்கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது. இதுதான் இந்த நிறுவனத்தின் முக்கியமான ஸ்பெஷல், இந்த தேர்ட் வேவ் காபி எப்படி உருவானது தெரியுமா..?
தேர்ட் வேவ் காபி நிறுவனத்தை சுஷாந்த் கோயல், ஆயுஷ் பத்வால் மற்றும் அனிருத் சர்மா ஆகியோர் இணைந்து நிறுவினர். ஆனால் இவர்களில் யாருக்கும் காபி ஷாப் நடத்தியதற்கான அனுபவம் இல்லை, ஆனா காஃபி மீதான ஆர்வமே அவர்களை ரிஸ்க் எடுத்து இத்துறையில் தொழில் உருவாக்குவது மட்டும் அல்லாமல் இன்று முக்கிய பிராண்டாக உயர்த்தியுள்ளது.
தேர்ட் வேவ் காபி நிறுவனம் சமீபத்தில் தான் Creaegis தலைமையிலான சீரியஸ் சி நிதிச் சுற்றில் 35 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியது. இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் முக்கியமான நகரங்களில சுமார் 100 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது.
இதில் பாதி அதாவது 50க்கும் அதிகமான கடைகள் நாட்டின் டெக் நகரமான பெங்களூரில் உள்ளன. 2016 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட தேர்ட் வேவ் காபி தற்போது சுமார் 150 மில்லியன் டாலர் மதிப்பிடப்படுகிறது அதாவது 1250 கோடி ரூபாய் அளவில் மதிப்பிடப்படுகிறது.

தேர்ட் வேவ் காபி பிராண்ட் கடைகள் தற்போது டெல்லி, குர்கான், புனே, ஹைதராபாத், நொய்டா, குன்னூர் மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களிலும் உள்ளது. தேர்ட் வேவ் காபி பிராண்டின் முகமாக விளங்கும் சுஷாந்த் கோயல் அமெரிக்காவில் இல்லினாய்ஸ்-ல் இருக்கும் நார்த்வெஸ்டர்ன் பல்கலைகழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எக்னாமிக்ஸ் படித்தார்.
இவர் படிக்கும் போதே பல வென்சர் கேபிடல் மற்றும் தனியார் பங்கு முதலீட்டு அமைப்பில் முதலீடு செய்தார். சுஷாந்த் கோயல் தேர்ட் வேவ் காபி பிராண்ட் துவங்கும் முன்பு அமெரிக்காவில் சில காலம் McKinsey & Co நிறுவனத்தில் பணியாற்றினார். இதே தொடர்ந்து சுஷாந்த் கோயல் தனியாக ஒரு டேட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications