திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது. இந்த முக்கியமான ஆன்மீக நிகழ்வு ஜனவரி 10 முதல் 19, 2025 வரை கொண்டாடப்படுகிறது. புனித மலைக் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லட்டு பிரச்சனையில் சிக்கியது. இங்குள்ள திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவிலில் 50 ரூபாய்க்கு வழங்கப்படும் பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மற்றும் மீன் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் நெய் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் நியமிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கொள்முதல் செய்த நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதம் தரமற்றதாக உள்ளது என புகார் எழுந்தது. இதனையடுத்து, பிரசாதங்களை விலங்கு கொழுப்பு கலந்த நெய் சேர்த்து தயாரித்ததால், ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து 3 நாட்களுக்கு மகா சாந்தி யாகம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கோயிலின் புதிய நிர்வாக அதிகாரியாக சியாமள ராவ் நியமிக்கப்பட்டார். அவர் மேற்கொண்ட ஆய்வில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறைவாக இருப்பதை அறிந்தார்.
அந்த நெய்யை குஜராத் மாநிலம், ஆனந்த் பகுதியில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்த நிலையில், கடந்த ஜூலை 17-ம் தேதி வந்த பரிசோதனை அறிக்கையில், நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்துள்ளது தெரியவந்தது. எனவே, இது தரமற்ற நெய் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முந்தைய ஆட்சியின் கொள்முதல் டெண்டரை சந்திரபாபு நாயுடு அரசு ரத்து செய்தது. இந்நிலையில், ஜெகன் ஆட்சியில் திருப்பதி பிரசாதங்கள் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.
எனவே, திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், திருப்பதியில் வழங்கப்படும் லட்டுக்களின் அசல் தரத்தை மீட்டெடுக்கும் வகையில் புதிய நெய் சப்ளையராக, கர்நாடகா மில்க் ஃபெடரேஷனை (KMF) மீண்டும் அணுகியது. லட்டுகளின் தரம் மற்றும் அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆகியவற்றில் இனி எந்த சமரசமும் இருக்காது என்று TTD நிர்வாக அதிகாரி ஜே. சியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.
2013-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையில் திருப்பதி லட்டு தயாரிக்க 3,000 டன் KMF-இன் நந்தினி நெய் பயன்படுத்தப்பட்டது. 2019-ஆம் ஆண்டிலும் 1,700 டன்களை வழங்கியது. மேலும், நந்தினி நெய்யின் ஆர்டரை 300 மெட்ரிக் டன்னிலிருந்து 3,000 மெட்ரிக் டன்னாக உயர்த்த TTD திட்டமிட்டுள்ளது. கோயிலில் தினமும் குறைந்தது 3.5 லட்சம் லட்டுகள் விநியோகிக்கப்படுவதாகவும், லட்டுக்கான நெய்க்காக ஆண்டுதோறும் 250 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
நந்தினி என்பது கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (KMF) மூலம் நிர்வகிக்கப்படும் ஒரு பால் பிராண்ட் ஆகும். இது தென்னிந்தியாவின் முன்னணி பால் பிராண்டாகும். இது 1955 ஆம் ஆண்டில் முதல் தொடங்கி செயல்பட்டு வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications