ஒரு நாடு எந்த அளவிற்குச் செழுமையாக இருக்கிறது என்பதைக் கணிக்க முக்கிய அளவு கோடாக இருக்கும் ஒன்று தனிநபர் வருமானம். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மாநிலமும் இதை அதிகரிக்கத்தான் பல வகையில் போராடி வருகிறது.
இந்த நிலையில் இந்தியா இன் பிக்சல்ஸ் என்ற டிவிட்டர் கணக்கில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் சராசரி வருமானம் என்ன..? எந்த மாநிலம் அதிகப்படியான வருமானத்தைப் பெறுகிறது என்ற முக்கியமான தரவுகளைப் பகிர்ந்துள்ளதுள்ளது.
இதில் முக்கியமாக இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானத்தைக் காட்டிலும் தமிழ்நாடு மிகப்பெரிய வித்தியாசத்தில் முன்னோடியாக உள்ளது.
தமிழ்நாடு
இந்தியா இன் பிக்சல்ஸ் கணக்கீட்டின் படி தமிழ்நாட்டில் அதிகத் தனிநபர் வருமானம் கொண்ட மாவட்டமாகத் தலைநகர் சென்னைக்கு அருகில் இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் சராசரியாக ஒருவர் வருடத்திற்குச் சுமார் 3.84 லட்சம் ரூபாய் அளவிலான தொகையைச் சம்பாதிக்கிறார்.
திருவள்ளூர்
தனிநபர் வருமானம் என்றால் ஒரு மாநிலம் அல்லது மாவட்டம் அல்லது நாட்டில் உள்ள மக்கள் ஒரு வருடத்திற்குச் சம்பாதிக்கும் தொகையின் சாராசரி அளவீடு தான். இந்த வகையில் தமிழ்நாட்டில் அதிகத் தனிநபர் கொண்ட மாவட்டமாகத் திருவள்ளூர் 3.84 லட்சம் ரூபாய் உடன் முதல் இடத்தில் உள்ளது.
கோயம்புத்தூர், ஈரோடு
திருவள்ளூர் மாவட்டத்தைத் தொடர்ந்து கோயம்புத்தூர், ஈரோடு ஆகியவை டாப் 3 இடத்தைப் பிடித்துள்ளது. இதன் படி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 2.4 லட்சமாக இருக்கும் நிலையில், இந்தியாவின் தனிநபர் வருமானத்தின் அளவு 1.35 லட்சம் ரூபாயாக உள்ளது.
கர்நாடகா, மகாராஷ்டிரா
கர்நாடகாவில் 2.2 லட்சம் ரூபாயாகவும், மகாராஷ்டிராவில் 3.77 லட்சமாகவும் உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் தனிநபர் வருமானம் 6.43 லட்சமாக உள்ளது.
தமிழ்நாடு மாவட்ட வாரியான தரவுகள்
- கன்னியாகுமரி - 2.14 லட்சம் ரூபாய்
- திருநெல்வேலி - 1.79 லட்சம் ரூபாய்
- தூத்துக்குடி - 2.04 லட்சம் ரூபாய்
- ராமநாதபுரம் - 1.30 லட்சம் ரூபாய்
- விருதுநகர் - 2.28 லட்சம் ரூபாய்
- தேனி - 1.34 லட்சம் ரூபாய்
- மதுரை - 1.88 லட்சம் ரூபாய்
- சிவகங்கை - 1.19 லட்சம் ரூபாய்
- திண்டுக்கல் - 1.63 லட்சம் ரூபாய்
- புதுக்கோட்டை - 1.24 லட்சம் ரூபாய்
- கோயம்புத்தூர் - 3.35 லட்சம் ரூபாய்
- திருப்பூர் - 2.22 லட்சம் ரூபாய்
- கரூர் - 2.52 லட்சம் ரூபாய்
- திருச்சி - 2.44 லட்சம் ரூபாய்
- தஞ்சாவூர் - 1.62 லட்சம் ரூபாய்
- திருவாரூர் - 1.10 லட்சம் ரூபாய்
- நாகப்பட்டினம் - 1.16 லட்சம் ரூபாய்
- நீலகிரி - 2.03 லட்சம் ரூபாய்
- ஈரோடு - 3.17 லட்சம் ரூபாய்
- சேலம் - 1.92 லட்சம் ரூபாய்
- நாமக்கல் - 2.70 லட்சம் ரூபாய்
- பெரம்பலூர் - 89,529 ரூபாய்
- கடலூர் - 1.55 லட்சம் ரூபாய்
- தர்மபுரி - 1.76 லட்சம் ரூபாய்
- விழுப்புரம் - 1.15 லட்சம் ரூபாய்
- கிருஷ்ணகிரி - 2.90 லட்சம் ரூபாய்
- திருவண்ணாமலை - 1.06 லட்சம் ரூபாய்
- காஞ்சிபுரம் - 2.81 லட்சம் ரூபாய்
- வேலூர் - 2.05 லட்சம் ரூபாய்
- திருவள்ளூர் - 3.84 லட்சம் ரூபாய்
- சென்னை - 2.26 லட்சம் ரூபாய்
கணக்கீடு
2019-20 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மாவட்ட வாரியாக மக்கள் தொகை மற்றும் மாவட்டத்தின் மொத்த வருமானம் ஆகியவற்றை வைத்து கணக்கீடு செய்து ஒவ்வொரு மாவட்டத்தில் தனிநபர் வருமானம் அளவுகளை முடிவு செய்துள்ளது.
பணவீக்கம், வருமானம்
இதை விட முக்கியமாக, பணவீக்க அளவீடுகளைச் சரி செய்ய 2011-12 தரவுகளை 1.65 உடன் பெருக்கி 2019-20 ஆண்டின் அடிப்படை அளவீட்டுக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதேபோல் வருமானத்திற்கு 1.05 உடன் பெருக்கி 2019-20 ஆண்டின் அடிப்படை அளவீட்டுக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications