1 வருடத்தில் 350% ஏற்றம்.. பல மடங்கு லாபத்தில் முதலீட்டாளர்கள்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

பெங்களூரை தலைமையிடமாக கொண்ட ஆடைகள் ஏற்றுமதி நிறுவனமான கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் (Gokaldas Exports Limited), கடந்த ஒராண்டில் அதன் பங்குதாரர்களுக்கு 350% மேலாக லாபத்தினை கொடுத்துள்ளன.

இன்று இந்த பங்கின் விலையானது என்.எஸ்.இ-யில் 3.74% அதிகரித்து, 381.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலையானது 389.85 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலையானது 335.10 ரூபாயாகவும் வர்த்தகமாகியுள்ளது.

இதே பி எஸ் இ-யில் 3.55% அதிகரித்து, 3892.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது அதிகபட்சமாக 389.50 ரூபாயாகவும், இதே குறைந்தபட்சமாக 336 ரூபாயாகவும் வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.

ஓராண்டில் என்ன நிலவரம்?

ஓராண்டில் என்ன நிலவரம்?

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் 52 வார உச்ச விலையானது, 413.80 ரூபாயாகவும், இதே 52 வார குறைந்தபட்ச விலையானது, 73.05 ரூபாயாகவும் உள்ளது.

இதற்கிடையில் கடந்த ஓராண்டில் இந்த பங்கின் விலையானது 86 ரூபாயில் இருந்து, 389.5 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த ஓராண்டில் மட்டும் 353% ஏற்றம் கண்டுள்ளது.

 

ரூ.5 லட்சம் முதலீடு

ரூ.5 லட்சம் முதலீடு

இப்பங்கில் ஒரு வருடத்திற்கு முன்பு 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், அதன் இன்றைய மதிப்பு 22 லட்சம் ரூபாய்க்கு மேல். பலமடங்கு லாபத்தில் உள்ளது.

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இப்பங்கின் விலையானது 17% ஏற்றம் கண்டுள்ளது. இதன் சந்தை மூலதனம் 2250 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

 

டெக்னிக்கல் நிலவரம்

டெக்னிக்கல் நிலவரம்

இப்பங்கின் விலையானது 20 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கும் மேலாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் 5 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜுக்கும் கீழாக வர்த்தகமாகி வருகின்றது.

ஃபண்டமெண்டலாக பார்க்கும்போது, கோகுல்தாஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது.

 

லாபம்

லாபம்

ஒருங்கிணைந்த நிகரலாபம் 398% அதிகரித்து, 30.11 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்னதாக 6 கோடி ரூபாயாக இருந்தது. இதே இந்த நிறுவனத்தின் விற்பனையானது 96% அதிகரித்து, 520.61 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக பல ஆர்டர்கள் இந்த நிறுவனத்திற்கு இருந்து வரும் நிலையில், அடுத்து வரும் காலாண்டுகளிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலே விற்பனை

பலே விற்பனை

குறிப்பாக இதன் அண்டை நாடுகளில் உள்ள ஷாப்புகள் மற்றும் இகாமர்ஸ் விற்பனை மூலமாகவும் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது கடந்த 2019ல் இருந்தே ஆண்டுக்கு ஆண்டு விற்பனை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் சமீபகாலமாக மூலதன பொருட்கள் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சில்லறை விற்பனை விலையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இதன் செலவினமும் அதிகரித்துள்ளது கவலையளிக்கும் விஷயமாகவே இருந்து வருகின்றது. அதேசமயம் வலுவான ஆர்டர்களும் இருந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+