தனியார் துறை கடன் வழங்கும் வங்கியான டிசிபி பேங்க் 3 கோடி ரூபாய்க்கும் குறைவான பிக்சட் டெபாசிட்களின் வட்டி விகிதங்களை குறைத்து அறிவித்திருக்கிறது. பொதுவாக மக்களால் அதிகம் விரும்பப்படும் முதலீட்டு திட்டம் என்றால் அது பிக்சட் டெபாசிட் தான். வங்கிகள் வழங்கும் பிக்சட் டெபாசிட்களின் வட்டி விகிதம் பல்வேறு காரணிகளை பொறுத்து மாறுபடலாம். ஒரு நாட்டின் பொருளாதார நிலை, ரிசர்வ் பேங்க்-இன் நடவடிக்கைகள் மற்றும் சந்தையில் நிலவும் போட்டித் தன்மை ஆகியவற்றை பொருத்தும் வங்கிகள் வழங்கும் பிக்சட் டெபாசிட்களின் வட்டி விகிதம் இருக்கும்.
ஒரு முதலீட்டாளர் பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் இந்த அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகளைத் தேர்வு செய்வது முக்கியம்.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ரெப்போ விகிதத்தை 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைத்து அறிவித்தது. 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு ரெப்போ விகித குறைப்பு ஏற்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதன் காரணமாக வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்து வருகின்றன. இதனடிப்படையில் தான் தற்போது டிசிபி பேங்க் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை 60 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இந்த திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் பிப்ரவரி 14, 2025 முதல் அமலுக்கு வரவுள்ளன. அதாவது இன்று முதல் இந்த புதிய வட்டி விகிதங்கள் தான் பொருந்தும்.
இந்த திருத்தத்தை தொடர்ந்து டிசிபி பேங்க் பொதுவாடிக்கையாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு 3.75% முதல் 8.05% வரை வட்டி வழங்க உள்ளது. இந்த வட்டி விகிதங்கள் ரூ. 3 கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட்களுக்கு பொருந்தும். 19 மாதங்கள் முதல் 20 மாதங்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதமாக 8.05% வரை வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கு ரூ.3 கோடிக்கும் குறைவான தொகைக்கு 4.25% முதல் 8.55% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 19 மாதங்கள் முதல் 20 மாதங்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதமாக 8.55 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
எந்த பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது?: பொது வாடிக்கையாளர்களுக்கு 26 மாதங்கள் முதல் 37 மாதங்களுக்கும் குறைவான பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 55 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. 8.05 சதவீதத்திலிருந்து 7.50 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. 37 மாதங்கள் முதல் 38 மாதங்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு 20 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான வட்டி விகிதம் 8.05 சதவீதத்திலிருந்து 7.85 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
டிசிபி பேங்க் 38 மாதங்களுக்கு மேல் 61 மாதங்களுக்கு குறைவான பிக்சட் டெபாசிட்களுக்கு 65 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்திருக்கிறது. இதனால் இதற்கு வழங்கப்பட்ட வட்டி விகிதமான 8.05%, 7.40 சதவீதமாக குறைந்திருக்கிறது.
ரெப்போ விகிதத்தை பொறுத்து வங்கிகளில் வழங்கப்படும் வட்டி விகிதங்களும் மாறுபடலாம். எனவே பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்ய இருக்கும் முதலீட்டாளர்கள் இது தொடர்பான அறிவிப்புகளை தெரிந்து கொண்டு அதன் பிறகு முதலீட்டு முடிவுகளை எடுங்கள்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications