ஒரு முதலீட்டில் ஒரு லட்சம் முதலீடு செய்து அதன் மூலம் பல கோடிக்கு அதிபதி ஆக முடியுமா? என்றால், அதற்கான வாய்ப்புகள் பங்கு சந்தையில் உள்ளன. எனினும் இதுபோன்ற மல்டிபேக்கர் பங்குகள் மறுபடியும் கிடைக்குமா? எப்படி இது போன்ற பங்குகளை கண்டறிவது? வாருங்கள் பார்க்கலாம்.
அந்த வகையில் கோடீஸ்வரர் ஆக ஒரு பொன்னான வாய்ப்பினை கொடுத்த மல்டிபேக்கர் பங்கினை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
வினதி ஆர்கானிக்ஸ் லிமிடெட் ஒரு லார்ஜ் கேப் நிறுவனமாகும். இது சிறப்பு கெமிக்கல் துறையினை சேர்ந்த ஒரு நிறுவனமாகும்.
கெமிக்கல் உற்பத்தியாளார்
இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 21,435.20 கோடி ரூபாயாகும். இந்த நிறுவனம் முன்னணி ஆர்கானிக் கெமிக்கல் மற்றும் சிறப்பு கெமிக்கல் உற்பத்தியாளாராகும். இது தற்போது சர்வதேச அளவில் 35 நாடுகளில் வணிகம் செய்து வருகின்றது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா, ஆசிய பகுதியில் பெரும்பாலான நிறுவனங்களுக்கு முக்கிய கெமிக்கல் சப்ளையராகவும் உள்ளது.
கோடீஸ்வரர் ஆக்கிய பங்கு
சிறப்பு நறுமணப் பொருட்கள், சிறப்பு மோனோமர்கள், பியூட்டில் பீனால்கள், இது தவிர இன்னும் சிறப்பு பொருட்கள் என பலவும் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் அடங்கும். இந்த நிறுவனம் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு கடந்த 2007ல் ஒரு போனஸினை அறிவித்தது. இதன் மூலம் இப்பங்கு முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கியுள்ளது.
பங்கு வரலாறு
பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று 2085.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது முந்தைய அமர்வான 2009.85 ரூபாயுடன் ஒப்பிடும்போது, 3.76% ஏற்றத்தில் காணப்படுகின்றது.
இந்த பங்கின் விலையானது கடந்த ஜூலை 14, 1995ல் 1.33 ரூபாயாக இருந்தது. இதன் தற்போதைய விலை நிலவரம் 2085 ரூபாயாகும். ஆக இதனுடன் ஒப்பிடும்போது கடந்த 27 ஆண்டுகளில் இப்பங்கானது 1,56,65940% ஏற்றம் கண்டுள்ளது.
52 வார உச்சம் & குறைவு
இப்பங்கின் 52 வார உச்ச விலை 2372.95 ரூபாயாகும். இது கடந்த செப்டம்பர் 12,2022ல் தொட்டது. இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1675 ரூபாயாகும். இது பிப்ரவரி 2, 2022ல் தொட்டது. தற்போது இந்த பங்கின் விலை உச்சத்தில் இருந்து 12.11% கீழாகவும், குறைந்த விலையில் இருந்து 24.50% மேலாகவும் காணப்படுகின்றது.
கோடீஸ்வரர்?
இந்த பங்கு கடந்த 2007, நவம்பர் 22ல் 1:2 என்ற விகிதத்தில் போனஸினை அறிவித்தது.
இந்த பங்கின் விலையானது 1.33 ரூபாய் இருக்கும் லெவலில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், உங்கள் வசம் 75,187 பங்குகள் இருந்திருக்கும். இது போனஸுக்கு பிறகு 1,12,780 பங்குகளாக இருக்கும். ஆக இதனை தற்போதைய சந்தை விலையுடன் ஒப்பிட்டு பார்த்தால், அதன் மதிப்பு 23.52 கோடி ரூபாயாகும்.
வாங்கலாமா?
இந்த நிறுவனம் தற்போது இரு இலக்கில் வலுவான வளர்ச்சியினை கண்டு வரும் நிலையில், இதன் வலுவான வளர்ச்சி தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த பங்கின் இலக்கு விலையினை தனியார் தரகு நிறுவனம் ஒன்று 2500 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. ஆக தற்போதும் இப்பங்கினை நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications