அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுக்கொள்கை மற்றும் பன்னாட்டு அரசியல் நிபுணர் சித்தார்த், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. அந்த பதிவில், "இந்த உலகம் கோயம்புத்தூரைப் பற்றி கவனிக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்குப் பின்னால்தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், கோயம்புத்தூர் அமைதியாகவே தொழிற்சாலைகள், ஸ்டார்ட் அப்புகள் மற்றும் திறமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சில நேரங்களில், பேசப்படாத இடங்களே முக்கியமானவையாக இருக்கின்றன" என தெரிவித்துள்ளார்.

சித்தார்த்தின் இந்த பதிவில் தற்போது வைரலாகி, விவாதத்தைத் தூண்டியுள்ளது. இந்தப் பதிவுக்குப் பதிலளித்த பலரும், "கோயம்புத்தூர் வளர்ந்து கொண்டிருக்கிறது. பெருநகரங்களைத் தவிர மற்ற நகரங்களும் இப்போது முக்கியக் கவனத்திற்கு வரவேண்டிய நேரம் இது" என கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
சிலர் கோயம்புத்தூரை அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள புதுமை மையங்களுடன் ஒப்பிட்டு பாராட்டினர். மற்றொருபுறம், குளிர்ந்த பருவமழைக் காற்றைப் பற்றியும், அந்த நகரத்தின் இயற்கை மற்றும் வாழ்வுத்தரத்தைப் பற்றியும் உருக்கமாக பதிவிட்டனர். அதில் ஒரு பயனர், "கண்டபடி இருந்தாலும், காணாமலே இருந்தாலும், கோயம்புத்தூர் ஒரு நிலைத்த வளர்ச்சியைக் கொண்ட நகரம். செயல்பாட்டில் எப்போதும் உறுதி உள்ள நகரம்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒருவர், "கோயமுத்தூர் என்பது சுயமாக வளர்ந்த நகரம். அரசுகளால் அல்ல.. தனியாரின் உழைப்பாலும், தொழில் முனைப்பாலும் உருவான நகரம் இது" என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "பலக்காடு சுரங்கப்பாதையும், மேற்கு தொடர்ச்சி மலைகளும் கோயம்புத்தூரை குளிர்ச்சியாக வைத்திருக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 'Cities on the Rise' எனும் தலைப்பில் LinkedIn வெளியிட்ட ஒரு முக்கியமான அறிக்கை, பெருநகரங்களுக்கு மாற்றான நகரங்களின் வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறது. இதில், 10 பெரிய நகரங்கள் அல்லாத (non-metro) நகரங்கள் விரைவாகவே பொருளாதார மையங்களாக மாறிக்கொண்டு வருவதையும் குறிப்பிட்டுள்ளது. இதற்கு உள்ளூர் திறமைகள், தனியார் முதலீடுகள் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவையே காரணம்.
அந்த பட்டியலில் கோயம்புத்தூரின் பெயர் நேரடியாக இல்லையென்றாலும், அந்த அறிக்கையில் பாராட்டப்பட்ட தன்மைகள், எளிமையான வாழ்க்கைச் செலவு, உள்ளூர் திறமைகளை வளர்க்கும் சூழ்நிலை மற்றும் தொழில்முனைவோரின் எண்ணிக்கை அனைத்தும் கோவைக்கும் பொருந்தும்.
பளபளக்கும் பெருநகரங்களின் விளம்பரங்களில் மட்டுமே வளர்ச்சி நடக்கிறது என நினைத்த காலம் கடந்துவிட்டது. இன்று, பெரிதாக பேசப்படாத கோயம்புத்தூர் போன்ற நகரங்கள் தான் இந்தியாவின் எதிர்காலத்தை அமைக்கிற முக்கிய அத்தியாயங்களை எழுதி வருகின்றன.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications