ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் உரிமையாளர் தன்னுடைய நிறுவனத்தை விற்பனை செய்து ஊழியர்களை பணக்காரர்களாக மாற்றியிருக்கிறார். ஜோதி பன்சால் என்பவர் ஆப்டைனமிக்ஸ் என்ற பெயரில் சாஃப்ட்வேர் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வந்தார். பின்னர் அதனை விற்பனை செய்த அவர் ஊழியர்களுக்கும் அதில் லாபம் கிடைக்கும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார். ஆப்டைனமிக்ஸ் நிறுவனத்தை அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ கடந்த 2017ஆம் ஆண்டு 3.7 பில்லியன் டாலர்களுக்கு கையகப்படுத்தியது.
ஜோதி பன்சாலால் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு சாப்ட்வேர் நிறுவனம் தான் ஆப்டைனமிக்ஸ். நிறுவனங்களின் மென்பொருள்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்த நிகழ் நேர மதிப்பாய்வுகளை வழங்குவது தான் இந்த நிறுவனத்தின் வேலை. இதனால் பல்வேறு நிறுவனங்களும் அவர்களின் மென்பொருள்களில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக சரி செய்ய முடிந்தது.

இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வந்த ஜோதி பன்சால் பின்னர் இதனை 2017 ஆம் ஆண்டு சிஸ்கோவிடம் விற்பனை செய்து விட்டார். ஜோதி பன்சால் தற்போது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் குடியிருக்கிறார். இவர் தொழில்நுட்ப துறையில் வல்லவராக பார்க்கப்படுகிறார். தற்போது இவர் ஹார்னஸ் (Harness) என்ற ஆட்டோமேட் சாஃப்ட்வேர் டெலிவரி ப்ராசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார் மற்றும் சைபர் செக்யூரிட்டி தளமான ட்ரேஸபில் ஏஐ (Traceable AI) நிறுவனத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிறுவனங்களின் மதிப்பு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக இருக்கிறது. ஐஐடியில் கணினி அறிவியல் பிரிவில் படிப்பை முடித்தவர் தான் ஜோதி பன்சால், பின்னர் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் வேலைக்கு சென்றார். மென்பொருள் பொறியாளராக வேலைக்கு சென்ற இவர் பின்னாளில் தனியாக வந்து சுய தொழில் செய்ய தொடங்கினார். அப்படி தொடங்கப்பட்டது தான் ஆப்டைனமிக்ஸ் நிறுவனம். இவர் தன்னுடைய பெயரின் கீழ் 25 உரிமங்களை பெற்று வைத்துள்ளார்.
மேலும் போர்ப்ஸ் நிறுவனத்தின் சிறந்த கிளவுட் கம்ப்யூட்டிங் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்த விருதுகளை பெற்றிருக்கிறார். ஆனால் இவர் தன்னுடைய முதல் நிறுவனமான ஆப் டைனமிக்ஸை விற்பனை செய்த போது தன்னுடன் பணிபுரிந்த 400 ஊழியர்களுக்கும் நிறுவனத்தின் பங்குகளை பரிசாக வழங்கினார். தற்போது ஒரு மில்லியன் டாலர் அளவுக்கு இதன் மதிப்பு தற்போது உயர்ந்து அவர்களில் பலர் 1 மில்லியன் டாலர்களையும், சிலரது பங்குகள் 5 மில்லியன் டாலர்களையும் கடந்துள்ளதாம். இந்த 400 ஊழியர்களும் பன்சாலை வாழ்நாளில் மறக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications