விற்பனை சரிவால் பாதிக்கப்பட்ட ஊத்துக்குளி வெண்ணெய் மற்றும் நெய் உற்பத்தியாளர்களுக்கு இந்த பண்டிகை காலம் சற்று நிம்மதி அளித்துள்ளது. ஏனெனில் நம் நாட்டில் தீபாவளி கோகுலாஷ்டமி போன்ற பண்டிகைக் காலத்தில் பல்வேறு பலகாரங்கள் செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலான பலகாரங்களுக்கு நெய் மற்றும் வெண்ணெய் தேவைப்படுகிறது. கடந்த ஆண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடுகையில் வெண்ணெய் மற்றும் நெய் பொருட்களுக்கான தேவை இந்த ஆண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஊத்துக்குளி வெண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அதிகரிப்பால் வெண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.20 அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஊத்துக்குளி வெண்ணெய் மற்றும் நெய்க்கு பிரபலமான ஊர். பல ஆண்டுகளாக குடிசைத் தொழிலாக வெண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் சமீப காலமாக வெண்ணை மற்றும் நெய் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

வெண்ணெய் மற்றும் நெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 2005-ஆம் ஆண்டில் 59-ஆக இருந்தது. ஆனால் 2024-ஆம் ஆண்டில் நெய் உற்பத்தி நிறுவனங்கள் 20-ஆகக் குறைந்துள்ளது. தற்போதுள்ள குறைந்த அளவிலான உற்பத்திக்கு தேவை சரிவு, 12 சதவீத ஜிஎஸ்டி மற்றும் ஊளியர்களின் பற்றாக்குறை ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு பண்டிகைக் காலம் ஊத்துக்குளி வெண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டை விட நெய் ஆர்டர்கள் 20% அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1989-ஆம் ஆண்டு முதல் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஆவாரம்பாளையம் சர்வோதயா சங்கத்தின் கிளை மேலாளர் பி.ராசு கூறுகையில், இந்த ஆண்டு பண்டிகை காலம் எங்களுக்கு நன்றாக இருந்ததால் ஆர்டர் வரத்து 20% அதிகரித்துள்ளது. நடப்பு பண்டிகை காலத்தில், தினமும், 750 கிலோ வெண்ணெய், 250 கிலோ நெய் தயாரித்து அனுப்புகிறோம். பெரும்பாலும் நாங்கள் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வருகிறோம்.
சாதாரண நாட்களில், வெண்ணெய் மற்றும் நெய் இரண்டையும் 300 கிலோ வரை உற்பத்தி செய்கிறோம். பண்டிகை காலம் கோகுலாஷ்டமியில் தொடங்கி தீபாவளி வரை நீடிக்கும். பொங்கல் சமயத்தில் விற்பனை மீண்டும் உயரும். தற்போது வெண்ணெய் கிலோ ரூ.520-க்கும், நெய் கிலோ ரூ.620-க்கும் விற்பனை செய்கிறோம். ஆர்டர்கள் அதிகரித்துள்ளதால், வெண்ணெய் மற்றும் நெய் விலை கிலோவுக்கு ரூ.20 அதிகரித்துள்ளது", என்று கூறியுள்ளார்.
இது குறித்து உள்ளூர் உற்பத்தியாளர் ஆர்.குமார் கூறுகையில், ''ஊத்துக்குளியில் சாதாரண நாட்களில் மாதந்தோறும் 45 டன் வெண்ணெய், 30 டன் நெய் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் பண்டிகைக் காலங்களில் இந்த அளவு உயரும். இது பண்டிகை காலம் என்பதால், ஆர்டர்களை உடனடியாக அனுப்ப வேண்டும். ஒரு வர்த்தகர் இன்று ஆர்டர் செய்தால், மறுநாள் காலையில் ஆர்டர் டெலிவரி செய்யப்படும். எங்களிடம் சில கோரிக்கைகள் உள்ளன. ஊத்துக்குளியில் பால், கிரீம், தயிர் ஆகியவற்றை சேமிக்க குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும்", என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications