குவாண்டம்ஸ்கேப் கார்ப் என்ற ஸ்டார்டப் நிறுவனம், பேட்டரிகளை உற்பத்தி செய்து வரும் ஒரு முன்னணி நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்யும் வகையில் பிளான்க் செக் ஒப்பந்தம் கடந்தாண்டில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் தான் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜக்தீப் சிங்குக்கு பல பில்லியன் டாலர்களில் ஊதியம் கொடுக்க பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
பங்கு சலுகை
மேற்கண்ட ஒப்பந்தத்தின் படி, இந்த நிறுவனம் பெரும் வளர்ச்சியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பல்வேறு மைல்கல்லை எட்டும்பட்சத்தில் 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை பெறுவார் என கிளாஸ் லூயிஸ் ஆலோசனை நிறுவனம் கணித்துள்ளது.
சம்பளம் எவ்வளவு?
இது குறித்து கடந்த வருடாந்திர கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் தரவுகள் கூறுகின்றன. எனினும் அவருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பது குறித்தான எந்த முக்கிய அறிவிப்பும் வெளியாகவில்லை.
தவிர்க்கலாம்
முன்னதாக இது குறித்து லூயிஸ் நிறுவனம் வெளியிட்ட கணிப்பில் கூறியிருந்தது. மேலும் சில முக்கிய நிறுவன முதலீட்டாளர்கள் இது குறித்து எதிர்ப்பு தெரிவித்ததாகவும், மற்றொரு அட்வைசரி நிறுவனமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்டார்ட் அப்களின் போக்கு
சமீபத்திய காலத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சம்பள விகிதம் மிக அதிகளவில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக டெஸ்லாவின் வெற்றிக்கு பிறகு இது பெரும் அளவில் வளர்ச்சி கண்டு வருகின்றது.
மூன்று மடங்கு சம்பளம்
இது குறித்து ஃபரியன்ட் ஆலோசகர்கள் நிறுவனத்தின் டேனா ஹாரிஸ் கூறுகையில், கடந்த ஆண்டு குறைந்தபட்சம் 15 கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமை பதவி வகிப்பவர்கள் , 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கு மேலான ஊதியத்தினை பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு எலான் மஸ்கிற்கு கிடைத்த ஊதியத்தினை விட மூன்று மடங்கு என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications