ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பவர்களுக்கு அவர்களின் பொறுப்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அவ்வளவுக்கு அதிகமான ஊதியமும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தலைமை செயல் அதிகாரி 2024 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 48 கோடி ரூபாய் ஊதியமாக பெற்று உலகிலேயே அதிக சம்பளம் பெற்ற தலைமை செயலதிகாரி என்ற பெருமையை பெற்றிருக்கிறார் .
ஜெகதீப் சிங் குறித்து தான் தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இவர் மின்சார வாகன பிரிவில் பிரபலமானவர். குவாண்டம் ஸ்கேப் என்ற நிறுவனத்தின் நிறுவனரும் , அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும் ஆவார். இவர் உலக அளவில் அதிக ஊதியம் பெற்ற தலைமை செயல் அதிகாரி என்ற பெருமைக்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார். இவர் 2024 பிப்ரவரி 16ஆம் தேதி குவாண்டம் ஸ்கேப் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார்.

அதற்கு முந்தைய ஆண்டில் இவர் ஆண்டு ஊதியமாக 17,500 கோடி பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 48 கோடி ரூபாயை அவர் ஊதியமாகப் பெற்று இருக்கிறாராம். அந்த வகையில் உலக அளவில் அதிக சம்பளம் பெற்ற தலைமை செயல் அதிகாரி இவர் தான். ஜெகதீப் சிங்கை பொருத்தவரை மின்சார வாகனங்களுக்கு பயன்படுத்தப்படக்கூடிய பேட்டரி தொழில்நுட்பத்தில் நிபுணராக இருக்கிறார். இவர் 2010 ஆம் ஆண்டு குவாண்டம் ஸ்கேப் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
மின்சார வாகனங்களில் பயன்படுத்தக்கூடிய பேட்டரிகளின் செயல்திறனை மேம்படுத்தக்கூடிய வகையில் நவீன தொழில்நுட்பம் கொண்ட பேட்டரியை இவரது நிறுவனம் தயாரிக்கிறது. குறைந்த நேரத்தில் சார்ஜ் ஏறி நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும் வகையிலான இந்த பேட்டரிக்கு உலகளவில் டிமாண்ட் அதிகம். இந்த நிறுவனத்தில் பில்கேட்ஸ் உள்ளிட்ட உலகின் பெரிய தலைகள் எல்லாம் முதலீடு செய்துள்ளன.
இவர் தற்போது நிறுவன தலைமை செயல் அதிகாரி பொறுப்பை சிவ சிவராமிடம் ஒப்படைத்துவிட்டார். கூடிய விரைவில் இவர் புதிய நிறுவனத்தை தொடங்கலாம் என சொல்லப்படுகிறது. இவர் அமெரிக்காவின் ஸ்டாண்ட் போர்ட் பல்கலைக்கழகத்தில் பிடெக் படிப்பையும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பையும் படித்து முடித்து இருக்கிறார். இவருக்கு 2024 ஆம் ஆண்டு கிடைத்த ஊதியத்தில் நிறுவனத்தின் பங்குகள் மூலம் மட்டும் 2.3 பில்லியன் டாலர்கள் கிடைத்திருக்கிறதாம். பொதுவாக தலைமை செயல் அதிகாரிகளுக்கு ஊதியம் என்பது பல்வேறு கொடுப்பனவுகள் கொண்ட தொகுப்பாக இருக்கும். நிறுவன பங்குகள், போனஸ் ஊதியம் என்பன உள்ளிட்டவை அடங்கும்.
Written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications