சாதாரண குடும்பத்தில் பிறந்து பொருளாதார பேராசிரியராக பணியை தொடங்கி பின்னர் தலைமை பொருளாதார ஆலோசகர் ,ரிசர்வ் வங்கி ஆளுநர் உள்ளிட்ட பதவிகளை வகித்து பிரதமர் வரை உயர்ந்தவர் மன்மோகன் சிங் மோகன் சிங்.
அவருடைய படிப்பு , வேலை மற்றும் சாதனையை விளக்கும் ரெஸ்யூமை தயாரித்து நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அதில் இடம்பெற்றுள்ள விவரங்களை பார்க்கலாம்..

கல்வி:
1950, பஞ்சா ப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் பிஏ முதல் வகுப்பில் தேர்வானவர்.
1952 , பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் எம்ஏ முடித்து அதிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.
1955 கேம்பிரிட்ஜில் இருக்கும் செயின்ட் ஜான்ஸ் கல்லூரி இவருக்கு ரைட்ஸ் பட்டம் (Wright's Prize) வழங்கியது.
1955- 1957ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ரென்பரிஸ் ஸ்காலர்ஷிப்(Wrensbury Scholar) பெற்றார்
1957 - ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் டி பில் முடித்தார்
பேராசிரியர் பணி:
1957 -1963 வரை பஞ்சாப் பல்கலைகழகத்தில் பொருளாதாரப் பிரிவு பேராசிரியராக கல்லூரியில் மாணவர்களுக்கு வகுப்பெடுக்க தொடங்கினார்
1963- 1965 வரை டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் சர்வதேச வர்த்தகம் குறித்த பிரிவில் பேராசிரியர்
1969 - 1971 வரை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராக பணி
1996 – டெல்லி பல்கலைகழகத்தில் பொருளாதார பள்ளியில் பேராசிரியர்
1964ஆம் ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி போக்கு மற்றும் அதன் வளமையான எதிர்காலம் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் ஆய்வு கட்டுரை வெளியிட்டார்
பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு புகழ்பெற்றவர்
அரசு சார்பாக வெளிநாட்டு பணி:
1966ஆம் ஆண்டில் பொருளாதார விவகாரங்கள் பிரிவில் அதிகாரி பணி
1966–69: UNCTADஇல் தலைமை வர்த்தக பிரிவில் பணி
1972–74: சர்வதேச நிதி சீர்த்திருத்த ஐஎம்எஃப் குழுவில் இந்தியாவுக்கான துணை தலைவர்
1980–82: இந்தியா – சோவியத் கூட்டு குழு திட்ட கூட்டத்தில் பணி
1982: இந்தியா – சோவியத் கூட்டு குழுவின் மேலாண்மை குழுவில் பணி
1993: காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா சார்பாக பங்கேற்பு
1993: வியன்னாவில் நடந்த மனித உரிமைகள் குழு கூட்டத்தில் பங்கேற்பு
அரசு பணி, பொருளாதார ஆலோசகர், அரசியல் பணி:
1971–72: வெளிநாட்டு வர்த்தக அமைச்சகம் பொருளாதார ஆலோசகர்
1972–76: நிதி அமைச்சகம், தலைமை பொருளாதார ஆலோசகர்
1976–80: ரிசர்வ் வங்கி இயக்குநர் ; தொழில் மேம்பாட்டு வங்கி இயக்குநர்
1976– 1980: நிதி துறை செயலாளர் பதவி , அணு சக்தி குழும உறுப்பினர், நிதி மற்றும் விண்வெளி திட்ட கமிஷன் உறுப்பினர்
1980– 1982: திட்ட குழுவின் செயலாளர்
1980–83: இந்தியா – ஜப்பான் கூட்டு குழுவின் தலைவர்
1982–1985: இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்
1982–85: சர்வதேச நாணய நிதியத்தில் ஆளுநர்கள் வாரியத்தில் பணி
1983–84: பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர்
1985: இந்திய பொருளாதார கூட்டமைப்பின் தலைவர்
1985– 1987: திட்ட கமிஷன் துணை தலைவர்
1987– 1990: ஜெனிவாவில் பொது ஆணைய குழு செயலாளர் பதவி
1990– 1991: பொருளாதார விவகாரங்கள் பிரிவில் பிரதமர் ஆலோசகர்
1991: யுஜிசி தலைவர்
1991– 1996: மத்திய நிதி அமைச்சர்
1996 முதல் : மத்திய நிதி அமைச்சக ஆலோசனை குழு உறுப்பினர்
1996– 1997: நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினர்
1998 : மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்
1998 : நிதிக்குழு உறுப்பினர்
1998 : நாடாளுமன்ற விதிகள் குழுவின் உறுப்பினர்
2000 : இந்திய நாடாளுமன்ற குழுவின் செயற்குழு உறுப்பினர்
2001: மாநிலங்களவை உறுப்பினர் பதவி
2004–2014: இந்திய பிரதமராக பதவி
2024: மாநிலங்களவையில் இருந்து ஓய்வு
விருதுகள்:
1956: கேம்பிரிட்ஜ் பல்கலைகழக , ஆடம் ஸ்மித் பரிசு
1987: பத்ம விபூஷன்
1993: யூரோமணியின் , ஆண்டுக்கான நிதி அமைச்சர் விருது
1993,1994: ஆசிய மணி விருது, ஆண்டுக்கான நிதி அமைச்சர்
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications