பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், ஒருநாள் ஸ்விக்கியில் டெலிவரி ஏஜெண்டாக பணிபுரிந்து தன்னுடைய அனுபவங்களை லிங்குடின் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நம்ரதா என்பவர் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் 9 ஆண்டுகளாக புராடக்ட் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதை ஆய்வு செய்து அந்த பொருள் தொடர்பான சந்தைப்படுத்துதல் என அனைத்தையும் மேற்பார்வையிடும் பணி இது. இவர் ஒரு நாள் டெலிவரி ஏஜெண்டாக பணி புரிந்து அந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

நம்ரதா ஸ்விக்கியில் ஒரு உணவு ஆர்டர் பெறுவதில் இருந்து பாதுகாப்பாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது வரை என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பது குறித்து கூறியுள்ளார். இது தொடர்பான தன்னுடைய பதிவில் உள்நாட்டு பிராண்டுகளான அர்பன் கம்பெனி, ஸ்விக்கி, ஸொமேட்டோ, பிளிங்கிட், ஓலா ஆகியவை குறைந்த கல்வி அறிவு கொண்ட மக்களுக்கு டெலிவரி வேலை போன்ற பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்திருப்பதாகவும் இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும் பங்கு வகிப்பதாகவும் கூறியுள்ளார்.
ஸ்விக்கியில் ஒரு வாடிக்கையாளர் உணவு ஆர்டர் செய்த உடன் டெலிவரி ஏஜெண்டுக்கு நோட்டிபிகேசன் வரும், அதில் அவர்கள் தற்போது இருக்கும் இடத்திலிருந்து குறிப்பிட்ட அந்த உணவகத்திற்கு செல்ல வேண்டிய தொலைவு எவ்வளவு, அந்த உணவகத்தில் இருந்து வாடிக்கையாளர் குறிப்பிட்டுள்ள லொகேஷனுக்கு செல்வதற்கு எவ்வளவு தொலைவு இருக்கிறது என்பன உள்ளிட்ட தகவல்கள் காட்டப்படுவதாக கூறியுள்ளார். மேலும் இந்த டெலிவரி மூலம் அந்தப் பணியாளர் எவ்வளவு தொகையை ஊதியமாக பெறுவார் என்பதும் ஸ்விக்கியின் டெலிவரி ஏஜெண்டுகளுக்கான செயலியில் காட்டுவதாகும், இது அவர்களை உற்சாகத்துடன் வேலை செய்ய ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு ஏஜென்ட் தனக்கு இட்ட பணியை ஏற்றுக்கொள்ளும் போது அந்த உணவகத்திற்கு சென்றவுடன் அதனை செயலியில் குறிப்பிட வேண்டும், மேலும் அந்த ஆர்டரை பெற்றுக் கொண்டது மற்றும் ஆர்டரை டெலிவரி செய்வது வரை அவர்கள் ஒவ்வொரு செயல்களையும் செயலியில் குறிப்பிட்டாக வேண்டும் என கூறியுள்ளார்.
குறிப்பாக உணவு டெலிவரி செய்வதற்கான இடத்தை அடைந்தவுடன் பணியாளர்கள் தங்களது ஸ்விக்கி சீருடையுடன் புகைப்படம் எடுத்து அதனை பதிவிட வேண்டும் என்றும், பதிவு செய்யப்பட்ட நபர் தான் டெலிவரி வேலையில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தவே இந்த அம்சம் ஸ்விக்கியில் செயல்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார். ஆர்டரை டெலிவரி செய்தவுடன் இந்த ஆர்டர் மூலம் அவருக்கு எவ்வளவு ஊதியம் கிடைக்கிறது என்பது காட்டப்படுவது சிறந்த அம்சம் என தெரிவித்துள்ளார். நம்ரதாவின் இந்த பதிவு , ஒரு உணவு டெலிவரி ஏஜெண்ட் எப்படி செயல்படுகிறார், நாம் ஆர்டர் செய்யும் பொருள் எந்தெந்த நிலைகளை கடந்து நம்மை வந்தடைகிறது என்பதை விவரிக்கும் வகையில் உள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications