குடியரசு கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் டொலான்ட் டிரம்பின் நெருங்கிய நண்பர் எலான் மஸ்க். ஆனால், தற்போது இவரும் எதிரிகளாக மாறிவிட்டனர். இருவரின் சமீபத்திய மோதல்களை உலகம் முழுவதில் உள்ள மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அதிபர் டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் செலவு மசோதாவை அறிமுகப்படுத்தியது. ஆனால், இதற்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மசோதாவால் நாட்டின் கடன் ரூ.200 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று கவலை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, எலான் மஸ்க் உடனான உறவு முடிந்துவிட்டது என்றும் அவர், அதிபர் பதவியின் மாண்பை அவமரியாதை செய்துவிட்டார் என்றும் அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். பின்னர், இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர். இதனால், இருவருக்கிடையேயான மோதல் உச்சகட்டத்திற்கு சென்றது. இதனைத் தொடர்ந்து, டிரம்ப் அரசின் ஒப்பந்தங்களை ரத்து செய்யப்போவதாகவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை நிறுத்தப்போவதாக எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்தார்.

ஆனால், பிறகு முடிவை மாற்றிக்கொண்டு, விண்கலம் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்தார். அதேபோல, ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கில் டிரம்ப் பெயர் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்தார். பின்னர் அந்தப் பதிவையும் அவர் நீக்கிவிட்டார். மேலும், இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவில், "கடந்த வாரம் அதிபர் டிரம்ப் குறித்து வெளியிட்ட பதிவுகளுக்கு வருந்துகிறேன். நான் வரம்பு மீறி சென்றுவிட்டதை உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், நியூராலிங்க் மற்றும் AI ஸ்டார்ட்அப் xAI ஆகியவை இந்தக் காலகட்டத்தில் புதிய நிதியைப் பெற்றிருந்தாலும், அவரது டெஸ்லா தான் அதிகம் பாதிக்கப்பட்டது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து டெஸ்லாவின் பங்கு 33% சரிவை சந்தித்தது. மேலும், விற்பனையும் பெருமளவில் குறைந்தது. எலான் மஸ்க், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கை விட சற்று முன்னதாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டாலும், எலான் மஸ்கின் சமீபத்திய இழப்புகள், குறிப்பாக அவரது சர்ச்சைக்குரிய நிலைப்பாடுகள் மற்றும் டிரம்பின் முயற்சிகளில் சுருக்கமான ஈடுபாடு ஆகியவற்றின் பின்னணியில், உன்னிப்பாக ஆராயப்படுகின்றன. இதற்கிடையே, 2025 ஏப்ரல் 29ஆம் தேதி எக்ஸ் வலைதளத்தில் பகிரப்பட்ட பதிவில், "அமெரிக்க அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சியில் எலான் மஸ்க், தன்னுடைய செல்வத்தில் 25 சதவீதத்தை (சுமார் $113 பில்லியன்) இழந்தார்" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு "மதிப்புக்குரியது" என்று அந்த பதிவை மேற்கொள்காட்டி எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிபர் டிரம்பிடம், எலான் மஸ்க் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எங்களுக்கு நல்ல உறவு இருந்தது. அவருக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள், மிகவும் நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார். மேலும், எலான் மஸ்க்கின் சமீபத்திய தொடர்பு குறித்து பதில் அளிப்பீர்களா..? என எழுப்பிய கேள்விக்கு, "உண்மையில் நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை. அவர் என்னிடம் பேச விரும்புகிறார் என்று நான் கற்பனை செய்வேன். நானும் அப்படித்தான் நினைப்பேன்" என்று கூறினார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications