ஒரு நாட்டோட பங்குச்சந்தையே இவர நம்பி தான் இருக்கு.. சொத்து மதிப்ப கேட்டா தலையே சுத்தும்..

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தின் அரச குடும்பம், உலகிலேயே பணக்கார அரச குடும்பம் ஆகும். இவர்களின் சொத்து மதிப்பும், சொகுசான வாழ்க்கையும் நம்மை பிரமிக்க வைக்கிறது. இந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தான் அபுதாபி பங்குச்சந்தையையே ஆட்டுவித்து வருகிறார்.

உலகின் மிக முக்கியமான பங்குச்சந்தைகளில் அபுதாபி செக்யூரிட்டிஸ் எக்ஸ்சேஞ்சும் ஒன்று. இந்த பங்குச்சந்தையே அரசு குடும்பத்தை சேர்ந்த ஒருவரை தான் சார்ந்திருக்கிறது. விரைவில் அபுதாபி பங்குச்சந்தையின் மதிப்பு ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவை எட்ட இருக்கிறது.

ஒரு நாட்டோட பங்குச்சந்தையே இவர நம்பி தான் இருக்கு.. சொத்து மதிப்ப கேட்டா தலையே சுத்தும்..

மார்ச் மாத நிலவரப்படி அபுதாபி பங்குச்சந்தையானது உலகிலேயே 17வது பெரிய பங்குச்சந்தை என்ற இடத்தை பிடித்துள்ளது. ஸ்பெயின் , பிரேசில் உள்ளிட்ட நாடுகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்த இடத்திற்கு வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமானவர் ஷேக் தஹ்னூன் பின் சையத் அல் நயான்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனரான அல்நயானின் மகன் இவர். தற்போது இவரது சகோதரர் தான் ஐக்கிய அரபு அமீரகத்தை ஆட்சி செய்து வருகிறார். இவர் 2016 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி குடும்பத்தின் தொழில்களை இவரே மேற்பார்வையிட்டு வருகிறார்.

ஷேக் தஹ்னூன் பின் சையத் அல் நயானுக்கு சொந்தமான நிறுவனம் அபுதாபி பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட 65 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் அல்லது ஐஎச்சி என அழைக்கப்படும் இவரது நிறுவனமானது கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 400 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.

இவர் உள்ளூரை சேர்ந்த சிறு நிறுவனங்களில் தொடங்கி எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வரை பல்வேறு துறைகளில் முதலீடுகளை குவித்து வைத்திருக்கிறார். இவரது இந்த இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 240 பில்லியன் டாலர்கள் ஆகும்.

இந்த நிறுவனம் அபுதாபி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது அதில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலமும் ஒரு குறிப்பிட்ட அளவு வருவாயை ஈட்டிவருகிறது. உலகின் புகழ்பெற்ற வால்ட் டிஸ்னி மற்றும் மெக் டொனாட்ஸ் நிறுவனங்களை விட இவரது நிறுவனத்தின் மதிப்பு அதிகம். இந்திய மதிப்பில் பார்க்கும் போது இவரது நிறுவனத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி ரூபாய் ஆகும் .

அபுதாபியின் அரச குடும்பத்தின் அனைத்து வணிகங்களையும் முழுமையாக வழிநடத்துபவர் இவரே. அபுதாபி முதலீட்டு ஆணையம் மற்றும் அபுதாபி வங்கி இரண்டுக்கும் இவரே தலைமை பொறுப்பு வகிக்கிறார் அபுதாபி பங்குச்சந்தையில் இவருக்கு சொந்தமாக பத்து நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+