சிறு வயதில் இருந்து கடுமையாக உழைத்து அதன் பிறகு முன்னணியில் இருக்கும் பலரின் கதைகளை கேட்டிருப்போம். அதிலும் சிலர் ஒரு படி மேலே சென்று எந்தவித சொத்துகளும் இல்லாமல் உழைத்து தாமாக ஒரு நிறுவனத்தை நிறுவி பெரிய சாதனைகளைப் படைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவரை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க உள்ளோம். சிறு வயதில் 20 மணி நேரம் வேலை செய்து சொந்த உணவகத்தை திறப்பதற்காக கடுமையாக உழைத்த ஒரு நபர் தற்போது அமெரிக்காவின் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற சிக்கன் ஃபிங்கர்ஸ் உணவுத் தொழிலான 'ரைசிங் கேன்ஸ்'-இன் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான டாட் கிரேவ்ஸ், அமெரிக்காவின் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். தற்போது 9.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், தனது சொந்த உணவகத்தைத் தொடங்க வாரத்திற்கு 90 மணி நேரம் மற்றும் சில நேரங்களில் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் பணியாற்றியிருக்கிறார்.

டாட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையினும் வேலை பார்த்திருக்கிறார். அது மட்டும் இன்றி சால்மன் மீன் பிடி வர்த்தகத்திலும் பணியாற்றியுள்ளார். தனது முதல் உணவகமான ரைசிங் கேன்ஸை திறப்பதற்காக கடின உழைப்போடு உழைத்துள்ளார். அமெரிக்காவின் லூசியானாவில் 1972-ஆம் ஆண்டு பிறந்த கிரேவ்ஸ் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். லூசியானா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் அவர் படித்த போது தான் கிரேவ்ஸ்-க்கு உணவகம் திறப்பது பற்றிய யோசனை முதன் முதலில் தோன்றியுள்ளது.
தனது உணவகத் தொழிலைத் தொடங்க முதலீட்டை திரட்ட, கிரேவ்ஸ் லாஸ் ஏஞ்சலஸுக்குச் சென்று ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வாரத்திற்கு 90 மணி நேரம் பணியாற்றினார். இன்னும் அதிகமான நிதி தேவை இருந்த காரணத்தினால் அலாஸ்கா சென்று 20 மணி நேரம் கடுமையான சூழ்நிலையில் சால்மன் மீன்பிடி தொழிலில் பணியாற்றினார்.
கிரேவ்ஸ் தனது கனவை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தினார். 1996-இல் அவர் தனது உணவகமான ரைசிங் கேன்ஸைத் தொடங்கினார். அதற்காக டாட் தனது சொந்த பணத்தில் $40,000 முதல் $50,000 வரை செலவழித்தார், மேலும் நண்பர்கள், குடும்பத்தாரிடமிருந்து $100,000 கடன் வாங்கி, தனது உணவகத்தைத் திறந்தார்.
முதல் உணவகத்தைத் தொடங்கியபோது கிரேவ்ஸுக்கு இதில் அனுபவம் இல்லை. அவர் வாரத்திற்கு ஏழு நாட்கள் உணவகத்தில் பணியாற்றினார். அவருடைய கடின உழைப்பின் காரணமாக ரைசிங் கேன்ஸ் சிக்கன் ஃபிங்கர்ஸ் தற்போது 3.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள, விரைவாக வளர்ந்து வரும் நிறுவனமாக மாறியுள்ளது. இது 40-க்கும் மேற்பட்ட இடங்களில் 800 கடைகளைக் கொண்டுள்ளது. கிரேவ்ஸ் குவென் கிரேவ்ஸை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தன் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு கஷ்டப்பட்டாலும் டாட் கிரேவ்ஸ் தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. தொடர்ந்து தனது முதல் உணவுத் தொழிலை தொடங்குவதற்காக போராடியுள்ளார். எந்தவித ஓய்வும் இல்லாமல் தனது லட்சியத்தை அடைந்து இன்று அமெரிக்காவின் பில்லியனர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications