மிட் சைஸ் எஸ்யூவி வாகனங்களில் ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹோண்டா எலிவேட், வோக்ஸ்வாகன் டைகன், ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற சில மாடல்கள் முன்னிலை வகிக்கின்றன. ஆனால், இந்த பிரிவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி, வெறும் 5 ஆண்டுகளில் சுமார் 5,00,000 யூனிட் விற்பனையுடன் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு வாகனம் உள்ளது. அது பிரபலமான கியா செல்டோஸ் கார்கள் தான்.
2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில் செல்டோஸ் மாடலுடன் இந்திய சந்தையில் கியா காலடி எடுத்து வைத்தது. அன்றிலிருந்து, இந்த கார் தயாரிப்பு நிறுவனம், உள்நாட்டு சந்தையில் மொத்தம் 10,00,000 யூனிட் விற்பனையை எட்டியுள்ளது. இது மிக விரைவாக ஒரு மில்லியன் யூனிட் விற்பனையை எட்டிய முதல் கார் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை கியாவுக்குப் பெற்றுத் தந்துள்ளது.

கியா பிராண்ட் கார்களின் மொத்த விற்பனையான 1,000,000 யூனிட்களில்.. சுமார் 48% அதாவது 480,000 யூனிட்டுகளுக்கு மேல் செல்டோஸ் கார்கள் விற்பனை ஆகியுள்ளது. 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம், கியா.. செல்டோஸின் புதுப்பிக்கப்பட்ட மாடலை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.10.90 லட்சம் முதல் ரூ.20.37 லட்சம் வரை உள்ளது.
கியா செல்டோஸ் மிட் சைஸ் எஸ்யூவி வாகனங்களில் மிகச்சிறந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவே இதன் அதிகத் தேவைக்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். கியா செல்டோஸ் பல அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை வழங்குகிறது. நீங்கள் பேசிக் வேரியண்ட்டை வாங்கினாலும் அல்லது டாப் வேரியண்ட்டை வாங்கினாலும், நீங்கள் கொடுக்கும் விலைக்கு தரமான தயாரிப்பு கிடைக்கும்.
எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி ஃபாக் லேம்ப்புகள், சீக்வென்ஷியல் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள், 18-இன்ச் கிரிஸ்டல் கட் அலாய் வீல்கள், முன் பார்க்கிங் சென்சார்கள், டூயல்-பேன் பனோரமிக் சன்ரூஃப், டூயல்-ஜோன் ஃபுல் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.25-இன்ச் HD ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8-இன்ச் HUD, காற்றோட்டமான முன் இருக்கைகள், வசதியான ஓட்டுநர் இருக்கை, எட்டு ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் பிரீமியம் ஒலி அமைப்பு, காற்று சுத்திகரிப்பு, 360 டிகிரி கேமரா பிளைண்ட் வியூ மானிட்டர் போன்ற பல அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
கியா செல்டோஸ் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட் ஸ்ட்ரீம் 1.5-லிட்டர் டர்போ-ஜிடி பெட்ரோல் (160PS/253Nm), ஸ்மார்ட் ஸ்ட்ரீம் 1.5-லிட்டர் பெட்ரோல் (115PS/144Nm) மற்றும் ஸ்மார்ட் ஸ்ட்ரீம் 1.5-லிட்டர் CRDi VGT டீசல் (116PS/250Nm). டர்போ பெட்ரோல் யூனிட்டுடன் 6-ஸ்பீடு iMT அல்லது 7-ஸ்பீடு DCT, NA பெட்ரோல் யூனிட்டுடன் 6-ஸ்பீடு MT அல்லது IVT ஆகியவை இணைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications