இந்த வாழ்க்கை போகிற போக்கில் நமக்கு பல பாடங்களை கற்று தந்து விடுகிறது . அப்படித்தான் கோயம்புத்தூரை சேர்ந்த சுதா தன் வாழ்க்கை அனுபவங்களை சாதகமாக்கி கொண்டு வெற்றிகரமான தொழில்முனைவோராக இருக்கிறார். தன்னுடைய மசாலா பொடி தயாரிப்பு மூலமாக இவர் ஆயிரக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
கரூர் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் தான் சுதா. இவரது தந்தை மரம் ஏறும் தொழில் செய்தவர் தாயார் கருப்பட்டி காய்ச்சி விற்பனை செய்து வந்தவர். இவருக்கு அக்கா மற்றும் தம்பி என உடன்பிறந்தவர்கள் இரண்டு பேர்.

குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்க வேண்டும் இதற்கு எப்படியாவது படித்தாக வேண்டும் என விடாமுயற்சியுடன் படிப்பில் ஆர்வம் காட்டினார். அவருக்கு தொடக்கத்தில் பெரிதளவில் படிப்பு வரவில்லை. பின்னர் தான் அவருக்கு ஒரு சிறந்த ஆசிரியரின் அறிமுகம் கிடைத்து அவருடைய உதவியோடு பள்ளி படிப்பை முடித்தார்.
திடீரென அரசு பனை கருப்பட்டி தொழில் செய்யக்கூடாது என தடை விதித்ததால் இவரது தந்தைக்கு தொழில் இல்லாமல் போனது இதனால் குடும்பம் இன்னும் வறுமையில் சென்றது.தாய்க்கும் ஆஸ்துமா மற்றும் காசநோய் பிரச்சனைகள் ஏற்பட்டன.
இத்தனை சவால்களுக்கு மத்தியில் எப்படியாவது படித்தாக வேண்டும் என முயற்சி செய்த சுதா கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார். பின்னர் இவருக்கு திருமணம் நடைபெற்ற நிலை இவருடைய மகளுக்கு ஒரு வயதாகும்போது அருகில் இருந்த மழலைப் பள்ளியில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
அப்போது குழந்தைகளுக்கு நல்ல சத்துள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு இவருக்கு கிடைத்தது. பின்னாலில் இதுதான் அவருக்கு சுய தொழிலாக கை கொடுத்தது. முதல் கட்டமாக இவர் தன்னுடைய வீட்டிலேயே கொத்தமல்லி, புதினா உள்ளிட்டவற்றை வாங்கி அதனை பொடியாக செய்து பயன்படுத்தி வந்துள்ளார். தன்னுடைய மகன் மற்றும் மகளுக்கு இந்த பொடிகளை கொடுத்துள்ளார். அவர்களும் இதனை மகிழ்ச்சியாக சாப்பிட்டுள்ளனர்.
எனவே வீட்டிலேயே தன்னுடைய அம்மாவின் உதவியுடன் பல்வேறு வகையான மசாலா பொடிகளை தயாரித்துள்ளார். முதலில் இவரது மசாலா பொடிகளை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாங்கி பயன்படுத்தியுள்ளனர். அனைவருக்கும் இது பிடித்து போகவே அவர்கள் இவரை இதையே சுய தொழிலாக மாற்றும்படி கூறியுள்ளனர். இப்படித்தான் இனியா ஆர்கானிக் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இப்போது இனியா ஆர்கானிக் தயாரிப்புகள் ஆன்லைனிலேயே கிடைக்கின்றன. உணவு தரப்பட்டு பிரிவின் அங்கீகாரத்தோடு 37 வகையான பொருட்களை இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. ஒரு மாதத்திற்கு 150 கிலோவுக்கும் அதிகமான மசாலா பொடிகளை விற்பனை செய்து மாதத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதாக இவர் தெரிவிக்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications