சோமணி செராமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒரு ஸ்மால் கேப் நிறுவனமாகும். இந்த நிறுவனம் டைல்ஸ் உற்பத்தியாளராகும். இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3535.50 ரூபாயாகும்.
இந்த மல்டிபேக்கர் பங்கின் விலையானது கடந்த ஓராண்டில் 118.29% ஏற்றம் கண்டுள்ளது. கடந்த ஆறு மாதத்தில் 16.10% ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து -8.44% சரிவினைக் கண்டுள்ளது.
பங்கு இலக்கு
இந்த பங்கினைத் தான் வாங்கலாம் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலை 1,000 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு முடிவினை வெளியிட்ட பிறகு, இந்த பங்கினை ஏற்றம் கண்டு வருகின்றது. எனினும் இன்று சரிவினைக் கண்டு வருகின்றது.
இன்றைய பங்கு நிலவரம்
இன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் 3.58% குறைந்து, 834.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 870 ரூபாயாகும், இன்றைய குறைந்தபட்ச விலை 828 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் பங்கு விலையானது 3.56% குறைந்து, 887.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 870 ரூபாயாகும், இன்றைய குறைந்தபட்ச விலை 828.55 ரூபாயாகவும் உள்ளது.52 வார உச்ச விலை 952.45 ரூபாயாகவும் உள்ளது. 52 வார குறைந்த விலை 336 ரூபாயாகும்.
காலாண்டு முடிவுகள்
சோமணி நிறுவனம் ஒரு கலவையான செயல்திறனை கண்டுள்ளது. டைல்ஸ் நிறுவனத்தின் வருவாய் விகிதமானது 19.3% அதிகரித்து, 587 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே எபிட்டா விகிதம் கடந்த ஆண்டினை காட்டிலும் 1.5% குறைந்து 62.4 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் 14% அதிகரித்து, 32.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
எதிர்பார்ப்பு
இதே இந்த நிறுவனத்தின் CAGR விகிதம் 13% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்த பங்கின் விலையானது 40% ஏற்றம் கண்டுள்ளது. இது 620 ரூபாயில் இருந்து, 865 ரூபாயாக இருந்தது. இதனை ஹோல்டில் இருந்து வாங்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications