இந்தியாவில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்களுக்கு போட்டியாக சந்தையில் விற்பனையாகி கொண்டிருக்கிறது யோகா குரு பாபா ராம்தேவ் அவர்களின் பதஞ்சலி நிறுவன பொருட்கள்.
ஓராண்டுக்கு பதஞ்சலி நிறுவனம் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுகிறது. இத்தகைய பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர்கள் ஸ்காட்லாந்தை சேர்ந்த என் ஆர் ஐ தம்பதிகள் என்பது தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதும் பாபா ராம்தேவ் அவர்களின் பதஞ்சலி நிறுவனம் தற்போது பிரபலமாக இருக்கிறது. கடந்த 2006 ஆம் ஆண்டில் தான் பாபா ராம்தேவ் அவரது உதவியாளர் ஆச்சாரிய பாலகிருஷ்ணாவோடு சேர்ந்து பதஞ்சலி ஆயுர்வேத என்ற நிறுவனத்தை தொடங்கினார.
இதற்காக இருவரும் தனித்தனியாக கடன் வாங்கினர். அப்போது இவர்களுக்கு வங்கி கடன்கள் பற்றிய விழிப்புணர்வு கிடையாது. இருவருமே கடன்களை வாங்கி தான் நிறுவனத்தை தொடங்கினர். அந்த சமயத்தில் ஒரு கணிசமான தொகையை இவர்களுக்கு வழங்கி உதவி செய்தது பாபா ராம்தேவ் அவர்களின் தீவிர பக்தர்களான சுனிதா மற்றும் அவரது கணவர் சர்வான் ஷாம் போடார்.
கடன் உதவி மட்டும் இன்றி ஒரு தீவையும் இவர்கள் பரிசாக வழங்கியுள்ளனர். அதாவது 2009 ஆம் ஆண்டில் லிட்டில் குமரே என்ற 900 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீவை இரண்டு மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கி பாபா ராம்தேவ் அவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளனர். தற்போது பதஞ்சலி நிறுவனத்தில் ராம்தேவ் மற்றும் ஆச்சாரியாவின் 92 சதவீத பங்குகளுக்குப் பிறகு சுனிதா மற்றும் சாம் போட்டர் தம்பதியினர் சுமார் 7.2% பங்குகளை பெற்றுள்ளனர்.

பாபா ராம்தேவ் அவர்களின் யோகா கலையை பின்பற்றி சுனிதா உடல் எடையை குறைத்துள்ளார். இதன் பிறகு பாபா ராம்தேவ் அவர்களின் யோகா கலைகள் மற்றும் பதஞ்சலி நிறுவன பொருட்கள் அனைத்தையும் அவர் பயன்படுத்த தொடங்கியுள்ளார். இது தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் உணர்ந்துள்ளார்.
இதனை அடுத்து பாபா ராம்தேவ் அவர்களுக்கு பெரும் தொகையை கடனுதவியாகவும் ஒரு தீவினை பரிசாகவும் அவர் வழங்கியுள்ளார்.
தற்போது அவர் ஸ்காட்லாண்டில் உள்ள பதஞ்சலி யோகா அறக்கட்டளையின் அறங்காவலராக செயல்பட்டு வருகிறார். மேலும் அந்த பகுதியில் யோகா வகுப்பையும் சுனிதா அவர்கள் நடத்தி வருகிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications