ஓல்டு இஸ் கோல்டு என்பார்கள். அதனை மெய்பிக்கும் விதமாக பழங்கால பொருட்கள், பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் மூலம் லட்சம் ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பலரும் இதனை பொழுதுபோக்குக்காக செய்பவர்கள் சிலர் எனில், சிலர் இதனை வணிகமாகவும் செய்து வருகின்றனர்.
இதன் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே லட்சக் கணக்கில் சம்பாதிக்க வழிவகுக்கும். இதற்காக நீங்கள் பெரியளவில் முதலீடும் செய்ய வேண்டியிருக்காது.
ரூ.1-க்கு ரூ.7 லட்சம்
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது, 1 ரூபாய் மூலம் 7 லட்சம் ரூபாய் வரையில் எப்படி சம்பாதிக்க முடியும் என்பதை தான். சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரூபாய் நோட்டின் புழக்கத்தினை நிறுத்தியது. எனினும் இது மீண்டும் 2015ம் ஆண்டில் அச்சிடப்பட்டது. அதன் பிறகு புதிய தோற்றத்துடன் மீண்டும் புழக்கத்திற்கு வந்தது.
சிறப்பு என்ன?
7 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றதா? அப்படி என்ன சிறப்பு இந்த நோட்டில் உள்ளது? வாருங்கள் பார்க்கலாம். இந்த 1 ரூபாய் தாளானது சுதந்திரத்திற்கு முன்பு அச்சிடப்பட்ட ஒரு தாளாகும். இந்த ரூபாய் தாளில் அப்போதைய ஆளுநர் ஜே.டபள்யூ கெல்லியின் கெயெழுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
எத்தனை ஆண்டுகள் பழமையானது?
இந்த ரூபாய் தாளானது 80 ஆண்டுகள் பழமையானது. இது பிரிட்டீஷ் இந்தியாவில் 1935ல் வெளியிடப்பட்ட ரூபாய் தாள் ஆகும். இது தவிர 1966ம் ஆண்டின் 1 ரூபாய் நோட்டின் மதிப்பு 45 ரூபாயாக உள்ளது. இதேபோல 1957ம் ஆண்டின் தாள் 57 ரூபாய்க்கும் கிடைக்கிறது.
OLXல் விற்பனை
ஒரு வேளை இந்த நோட்டுகள் உங்களிடம் இருந்தால், அதனை ஓ எல் எக்ஸ்-ல் விற்றுக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் ஓ எல் எக்ஸில் ஒரு கணக்கினை தொடங்கிக் கொள்ளுங்கள். கணக்கினை உருவாக்கிய பிறகு ரூபாயின் நோட்டின் முன் பக்கம், பின் பக்கத்தினை போட்டோ எடுத்து அதனை பதிவிடுங்கள்.
சரியான விவரங்களை கொடுக்கவும்
நீங்கள் உங்களது மொபைல் எண், மெயில் ஐடி, மற்ற விவரங்களை பதிவிடவும். இதன் மூலம் தேவையிருப்பவர்கள் உங்களை நாடலாம். இப்படி பழைய ரூபாய் தாள்கள் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும். இதற்காக இன்னும் பிரத்யேகமான பல தளங்கள் உள்ளன. அவற்றிலும் நீங்கள் உங்கள் கணக்கினை தொடங்கி, போட்டோக்களை பதிவிடலாம். இதன் மூலம் பழைய ரூபாய் நோட்டுகள், காயின்களை விற்பனை செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications