ரூ. 20,000 SIP முதலீட்டை ரூ. 1 கோடியாக மாற்றிய ஃபண்டு.. சான்சே இல்ல.. செம லாபம்!

சென்னை: சில நேரங்களில், நாம் மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யும் முதலீடு, நமக்கு அபார லாபத்தைப் பெற்றுத் தரும். ஆனால் ஆரம்பிக்கும்போது இது உண்மையில் நமக்கு நல்ல வருமானத்தைத் தருமா.. இல்லையா.. என்று குழப்பத்தில் ஆரம்பித்தாலும் முடிவு சிறந்ததாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் முதலீடு செய்ய உள்ள மியூச்சுவல் ஃபண்ட்-இன் முழு விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக அந்த ஃபண்ட் ஹவுஸ்-இன் நற்பெயர் மற்றும் அதை திறம்பட நிர்வகிக்கும் நிதி மேலாளர்கள் குறித்த விபரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் செய்யும் முதலீடு நல்ல லாபத்தை ஈட்ட உதவும். அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் திறம்பட செயல்பட்ட ஒரு ஸ்மால் கேப் ஃபண்டின் விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் கடந்த பத்து ஆண்டுகால இடைவெளியில் ரூ. 20,000 ரூபாய் மாத SIP முதலீட்டை ரூ.1 கோடியாக மாற்றியுள்ளது. இந்த ஸ்மால் கேப் ஃபண்ட், மே 15ஆம் தேதி 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டத்தின் மூலம் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கடந்த பத்து வருட காலத்தில் 27.24 சதவீத ஆண்டு வருமானத்தை சம்பாதித்து இருப்பார்கள்.

ரூ. 20,000 SIP முதலீட்டை ரூ. 1 கோடியாக மாற்றிய ஃபண்டு.. சான்சே இல்ல.. செம லாபம்!

ஏப்ரல் மாதம் 2024ஆம் ஆண்டு நிலவரப்படி ரூ. 20,164 கோடி, இந்தக் குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 64 சதவீதம் ஸ்மால் கேப் ஃபண்டிலும், 25 சதவீதம் லார்ஜ் கேப் ஃபண்டிலும், 10 சதவீதம் ரொக்கப் பணத்திலும் முதலீடு செய்தது. இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவை வாசவ் சாகல் மற்றும் சஞ்சீவ் சர்மா ஆகியோர் நிர்வகிக்கின்றனர்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் கடந்த பத்து ஆண்டுகளில் 13 வகையான ஸ்மால் கேப் ஃபண்டுகள் திறம்பட செயல்பட்டுள்ளன. அவற்றின் வருமானத்தின் விகிதத்தை பார்த்தால் 15.79 சதவீதம் முதல் 25.49 சதவீதம் வரை உள்ளது. இந்த 13 ஸ்மால் கேப் பண்டுகளிலும் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், தற்போது 54.53 லட்சம் முதல் 91.78 லட்சம் வரை சம்பாதித்து இருப்பார்கள்.

ஸ்மால் கேப் ஃபண்டுகளில் மிகப்பெரிய ஃபண்டான நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் சுமார் ரூ. 20,000 SIP முதலீட்டை ரூ. 91.78 லட்சமாக மாற்றியுள்ளது. இது சராசரியாக 25.49 சதவீத ஆண்டு வருமானத்தை அளித்திருக்கும். அதே போல HSBC ஸ்மால் கேப் ஃபண்ட் ரூ.20,000 முதலீட்டை ரூ. 77.54 லட்சமாக மாற்றி உள்ளது. இதன் சராசரி ஆண்டு வருமானம் 36 சதவீதமாக இருக்கிறது.

குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு ஸ்மால் கேப் ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய நாங்கள் உங்களுக்கு பரிந்துரை செய்யவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஸ்மால் கேப் ஃபண்டு ரூ. 20,000 SIP முதலீட்டை ரூ. 1 கோடியாக மாற்றியது என்பதைத்தான் விவரிக்கிறது. மேலே கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஒருவர் முதலீட்டு முடிவுகளை எடுக்கக் கூடாது. நீங்கள் முதலீட்டு முடிவுகள் எடுப்பதற்கு முன்பு, உங்களுடைய நிதி ஆலோசகரை கலந்து ஒன்றுக்கு இருமுறை யோசித்து உங்களின் சுய விருப்பத்தில் முதலீடு செய்யவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+