மும்பை: இந்தியாவிலேயே பணக்கார குடும்பம் அம்பானி குடும்பம் தான். இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி. அவரது சொத்து மதிப்பு 117.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறது ஃபோர்ப்ஸ் தளம். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இவரை அதிக உரிமை கொண்டவர் ஒருவர் இருக்கிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திருபாய் அம்பானி அவர்களால் நிறுவப்பட்டது.
திருபாய் அம்பானி – கோகிலாபென் தம்பதிக்கு முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி என இரண்டு மகன்கள். இருவருமே தந்தையை பின்பற்றி தொழிலில் இறங்கினார். ஆனால் இதில் அனில் அம்பானிக்கு சற்றே சறுக்கல் ஏற்பட்டது. இருந்தாலும் அவரது சகோதரர் முகேஷ் அம்பானி வெற்றிகரமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகித்து வருகிறார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை பொருத்தவரை முகேஷ் அம்பானி அதன் தலைவராக இருப்பதால் அவரிடம் தான் அதிக எண்ணிக்கையிலான பங்குகள் இருக்கின்றன என நான் நினைக்கலாம். ஆனால் முகேஷ் அம்பானியிடமோ அல்லது அவரது மனைவி அல்லது மகன்கள், மகளிடமோ இருப்பதை விட அதிகபட்ச பங்குகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார் ஒருவர். அவர் தான் கோகிலாபென் அம்பானி.
திருபாய் அம்பானி அவர்களின் மனைவியும் முகேஷ் அம்பானி அவர்களின் தாயுமான கோகிலா பென் அம்பானி தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் அதிகபட்ச பங்குகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். கோகிலாபென் அம்பானிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி நிறுவனத்தில் 1.57 கோடி பங்குகள் இருக்கின்றன. இது நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 0.24 சதவீதம் பங்கு ஆகும்.
முகேஷ் அம்பானியின் மகன்கள் ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி ஆகியோர் தலா 80 லட்சம் பங்குகளை வைத்திருக்கின்றனர். நிறுவனத்தின் மொத்த பங்குகளில் இது 0.12 சதவிகிதமாகும். அம்பானி குடும்பத்தை பொருத்தவரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புரமோட்டர்கள் என்ற முறையில் நிறுவன பங்குகளில் 50 . 39 சதவீத பங்குகளை கொண்டுள்ளனர்.
மீதமுள்ள 49.61 சதவீத பங்குகள் சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் வசம் இருக்கின்றன. தற்போதைய சூழலில் கோகிலா பென் அம்பானியின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 18,000 கோடி ரூபாயாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
திருபாய் அம்பானியின் சொத்துக்களையும் தொழில்களையும் முறையாக பிரித்து மகன்களுக்கு வழங்கியவர் கோகிலாபென் அம்பானி. இதன் மூலம் திருபாய் அம்பானியின் இறப்புக்கு பிறகும் ரிலையன்ஸ் நிறுவனம் இன்றும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கு காரணமானவராக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications