மும்பை: இந்தியாவில் சில குறிப்பிட்ட ஸ்மால் கேப் நிறுவனங்கள் நீண்ட காலம் தங்களை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு பெத்த லாபத்தை பெற்று தருகின்றன. அந்த வகையில் குளிர் பதன பெட்டிகளுக்கான வாயு உற்பத்தியில் ஈடுபட்டு வரக்கூடிய ஒரு நிறுவனத்தின் பங்கு 10 ஆண்டுகளில் 11,000% லாபம் பெற்று தந்துள்ளது.
Refex Industries என்ற இந்த ஸ்மால் கேப் நிறுவனத்தின் மதிப்பு 1,600 கோடி ரூபாயாகும். இந்த நிறுவனம் தற்போது ஏசி மற்றும் குளிர்பதன பெட்டிகளுக்கு தேவையான வாயுக்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. குளோரோ ஃப்ளோரோ கார்பன்களுக்கு மாற்றான வாயுவை இந்த நிறுவனமும் தயாரிப்பதன் காரணமாக சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10 ஆண்டுகளில் சுமார் 11,000 % உயர்ந்துள்ளது. ஜூன் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பானது ரூ.152.40 என வர்த்தகமானது. இதுவே 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தையும் ஒரு பங்கு மதிப்பு ரூ.1.37 தான்.

இந்த நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 11,000% லாபத்தை பெற்று தந்துள்ளது. அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு தற்போது அது 11 லட்சம் ரூபாயாக கிடைத்திருக்கும். ரீஃபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளை பொருத்தவரை 55.3% பங்குகள் புரமோட்டர்களிடமே இருக்கிறது. மீதமுள்ள பங்குகளில் 28% சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் பிற நிறுவனங்கள் வசம் இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் நிதி நிலைமையை பொருத்தவரை 2023 ஆம் நிதி ஆண்டில் வருவாய் 1,637 கோடி ரூபாய், லாபம் 116 கோடி ரூபாய். நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1,680 கோடி ரூபாய், புக் வேல்யூ 41.97 , ஃபேஸ் வேல்யூ 2 ஆகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 549 % லாபத்தையும் 10 ஆண்டுகளில் 11,000% லாபத்தையும், கடந்த ஓராண்டு காலத்தில் 44% லாபத்தையும் தந்துள்ளது. இதனிடையே எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் அரிஹந்த் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் மிலின் கூற்று படி ,இந்த நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே இருக்கும், ஒரு பங்கின் மதிப்பு 159 ரூபாய் என்ற இலக்கை எட்டியவுடன் இந்த நிறுவனத்தின் பங்கு நிச்சயமாக 176 ரூபாய் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications