இன்போசிஸ் துணை நிறுவனர் நந்தன் நீலகேனியின் மனைவி ரோகிணி நீலகேனி பங்குகளை வாங்கியதை அடுத்து ஒரு ஸ்மால் கேப் நிறுவனத்தின் பங்கு இரண்டு நாட்களிலேயே 11% உயர்ந்துள்ளது.
ரோகிணி நீலகேனி கடந்த வியாழக்கிழமை அன்று ஆல்கார்கோ கடி (Allcargo Gati ) என்ற ஸ்மால் கேப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் 0.62 சதவீத பங்குகளை வாங்கினார். ஒரு பங்கின் மதிப்பு 105 ரூபாய் என்ற விலையில் 8,13,375 பங்குகளை அவர் வாங்கியுள்ளார். இதற்காக அவர் 8. 55 கோடி ரூபாயை வழங்கியுள்ளார். ரோகிணி நீலகேனி பங்குகளை வாங்கியதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை என இரண்டு வர்த்தக நாட்களிலும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 11% வரை உயர்ந்துள்ளது.

திங்கட்கிழமை அன்று பங்குச்சந்தையில் ஆல் கார்கோ கடி நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 116.75 என உச்சபட்ச மதிப்பை எட்டியது. இந்த நிறுவனத்தினை பொருத்தவரை 46.90 சதவீத பங்குகள் ப்ரோமோட்டோர்கள் வசமும் 53.10% பங்குகள் சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் வசமும் இருக்கின்றன.
இந்த நிறுவனம் ஜூலை மாதத்தில் 170 கோடி ரூபாய்க்கு நிதி திரட்டியது. இதனை நவீன தொழில்நுட்பங்கள் உள்கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்ய இருப்பதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிறுவன பங்கினை பொருத்தவரை கடந்த ஓராண்டு காலத்தில் என பார்க்கும்போது 10.3 சதவீதம் என இதன் பங்கு மதிப்பு குறைந்துள்ளது . அதுவே கடந்த ஆறு மாத காலத்தில் 12 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 10 சதவீதம் என இதன் மதிப்பு உயர்ந்துள்ளது. ஆல் கார்கோ கடி என்பது ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் இந்தியாவின் முன்னணி லாஜிஸ்டிக் சர்வீஸ் ப்ரொவைடராக செயல்பட்டு வருகிறது. கிடங்குகள், சப்ளை செயின் மேனேஜ்மென்ட் என பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 90 ரூபாய், 52 வார கால அதிகபட்ச மதிப்பு 170.90 ரூபாய் ஆகும். இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1600 கோடி ரூபாய். 2024ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் 1710 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது. 6 கோடி ரூபாய் லாபமாக பெற்றுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications