தூத்துக்குடி: தென் தமிழ்நாட்டின் மாபெரும் தொழில் நகரமான தூத்துக்குடியில் தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வரும் வேளையில் அதிகப்படியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாகத் தூத்துக்குடி விமானப் போக்குவரத்து வசதி மேம்படுத்தப்பட உள்ளது.
தற்போது தூத்துக்குடி விமான நிலையம் சிறிய விமானங்களை (ATR) கையாளும் வகையிலேயே உள்ளது, இதை எர்பஸ் 321 போன்ற பெரிய விமானங்களைக் கையாளும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பெரிய விமானங்கள் சுமார் 250 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை, ஆனால் ATR விமானங்கள் ஏறத்தாழ 78 பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.

எர்பஸ் 321 போன்ற பெரிய விமானங்களை தூத்துக்குடிக்கு வரும் பட்சத்தில் வெளிநாட்டு விமானங்களும் நேரடியாகச் சேவை அளிக்கும் திறன் பெறும். தற்போது துவங்கியுள்ள விமான நிலைய மேம்பாட்டுப் பணிகள் டிசம்பர் காலாண்டில் நிறைவடைவதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம், சர்வதேச விமானச் சேவைகளையும் தூத்துக்குடி விமான நிலையம் கையாளும் திறன் பெறும்.
கடந்த சில வருடத்தில் சுமார் 80,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் மாபெரும் தொழிற்சாலைகள் தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் தொடங்கப்படவுள்ளதால், விமான நிலைய மேம்பாடு அவசியமானதாக்க உள்ளது.
இந்த முதலீட்டில் மிகவும் முக்கியமானதாக வியட்நாம் நாட்டின் எலக்ட்ரிக் கார் நிறுவனமான VinFast 16,000 கோடி ரூபாய் முதலீடு செய்து வருகிறது, அதேபோல், ACME, Semcorp, Umwelt மற்றும் Leap Green Energy நிறுவனங்கள் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்திற்கான பல்வேறு பிரிவுகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ISRO தூத்துக்குடியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள குலாசேகரப்பட்டணத்தில் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை கட்டமைத்து வருகிறது.
தூத்துக்குடி விமான நிலைய மேம்பாட்டுப் பணிகள் ₹381 கோடி செலவில் 2021ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன, ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இந்த பணிகள் தேக்கம் அடைந்தது. 2023ஆம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு இத்திட்டத்தை ஒரு வருடம் தாமதப்படுத்தியது.
இந்த விரிவாக்கத் திட்டத்திற்காகத் தமிழ்நாடு அரசு 106 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளை மும்பை தலைமையிடமாகக் கொண்டிருக்கும் Tarmat நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
RPG குழுமத்தின் KEC International நிறுவனம் 17,341 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட புதிய டெர்மினல் கட்டிடத்தைக் கட்டமைத்து வருகிறது. தற்போதுள்ள டெர்மினல் கட்டிடம் சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications