தூத்துக்குடி மாவட்டத்தில் கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தி தளம் அமைப்பதற்காக, சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.36,238 கோடி முதலீடு செய்ய, இந்த வருடத்தின் துவக்கத்தில் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது உற்பத்தி தளம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது.
தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்துறை நகரமாக மாறி வரும் தூத்துக்குடி-யில் அடுத்தடுத்து புதிய முதலீடுகள் குவிந்து வந்தாலும், பல மாதங்களாக கிரீன் ஹைட்ரஜன் திட்டத்தில் பெரிய செயல்பாடுகள் இல்லாமல் இருந்தது. கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தி, சேமிப்பு, ஏற்றுமதி என்பது இந்தியாவுக்கு புதியது என்பதால் இத்துறைக்கான அடிப்படை கட்டமைப்பை திறம்பட அமைக்க வேண்டியது கட்டாயம்.

இந்த வகையில் செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மாபெரும் தூத்துக்குடி திட்டத்திற்கான முதல் கட்ட இன்ஜினியரிங் டிசைன் பணிகளுக்கான ஒப்பந்தம் இத்தாலி நாட்டை தலைமையிடமாகக் கொண்ட மெய்ரே (Maire) நிறுவனத்தின் இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான பிரிவான டெக்னிமொன்ட் (Tecnimont) மற்றும் சஸ்டெயினபிள் டெக்னாலஜி நிறுவனமான நெக்ஸ்கெம் (Nextchem) ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
டெக்னிமொன்ட் - நெக்ஸ்கெம் உருவாக்கும் முதல்கட்ட டிசைன் அடிப்படையில் தூத்துக்குடியில் கிரீன் அம்மோனியா உற்பத்தி செய்யப்படும் என செம்ப்கார்ப் கிரீன் ஹைட்ரஜன் இந்தியா தெரிவித்துள்ளது. இதை ஆதாரமாக வைத்து ஹைட்ரஜன் எரிவாயு உருவாக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி கிரீன் ஹைட்ரஜன் திட்டம் மூலம் தூத்துக்குடி பகுதியில் சுமார் 1511 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கிரீன் ஹைட்ரஜனை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சோஜிட்ஸ் கார்ப் (Sojitz Corp) மற்றும் கியூஷு எலக்ட்ரிக் பவர் (Kyushu Electric Power) உள்ளிட்ட ஜப்பான் நிறுவனங்களுடன் செம்ப்கார்ப் இணைந்துள்ளது.
ஹைட்ரஜன் வாயு தண்ணீரில் இருந்து தான் உருவாக்கப்படுகிறது, தண்ணீர் மூலக்கூறில் இருக்கும் H20-வை தனியாகப் பிரிப்பது மூலம் ஹைட்ரஜன் வாயுவை உருவாக்க முடியும். இதை electrolysis மூலம் உருவாக்கப்படுகிறது, ஆனால் இந்த electrolysis இயக்க மின்சாரம் தேவை, இதில் பயன்படுத்தும் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க மின்சாரமாக இருந்தால் இதுதான் கிரீன் ஹைட்ரஜன்.
கிரீன் ஹைட்ரஜன் வாயு மற்றும் காற்றில் இருந்து பிரிக்கப்படும் நைட்ரஜன் ஆகியவற்றை அதிகப்படியான வெப்பம் மற்றும் அழுத்தம் மூலம் கிரீன் அமோனியா உருவாக்கப்படும். கிரீன் அமோனியா உருவாக்க Haber process என்னும் முறை பயன்படுத்தப்படும்.
தூத்துக்குடியில் தற்போது கிரீன் ஹைட்ரஜன் தயாரிக்க ACME நிறுவனம் 52,000 கோடி ரூபாயும், Petronas நிறுவனம் 34,000 கோடி ரூபாயும், Sembicorp நிறுவனம் 36,238 கோடி ரூபாயும், Leap Green Energy நிறுவனம் 22,842 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதோடு மத்திய அரசின் NTPC, கிரீன் ஹைட்ரஜன்-க்காக மாபெரும் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.
இந்த 4 நிறுவனத்தில் Sembicorp மற்றும் Leap Green Energy ஆகியவை தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் வந்துள்ளது. இதன் மூலம் தென்மாவட்டமான தூத்துக்குடி இந்தியாவின் ஹைட்ரஜன் ஹைப் ஆக மாறி வருகிறது.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications