கோயம்புத்தூர்-க்கு போட்டியாக உருவெடுக்கும் தூத்துக்குடி.. லட்டு மாதிரி 6 திட்டம்.. இது போதுமே..!!

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வர்த்தகம் ஒரு நகரத்தை மட்டும் சார்ந்து இருக்காமல் பல நகரங்களைச் சார்ந்துள்ளது. கடந்த 10 வருடத்தில் கோயம்புத்தூரில் ஐடி துறையின் வளர்ச்சி பெங்களூருக்கு இணையாக உள்ளது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூரில் MSME துறையைப் பெரிய நிறுவனங்களின் வருகையும் அதிகரித்துள்ளது, எலக்ட்ரிக் இரு சக்கர வாகன துறையும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து இந்தியாவிலேயே முன்னோடியாக உள்ளது.

இந்த வரிசையில் தற்போது கோயம்புத்தூர்-க்கு போட்டியாகத் தூத்துக்குடி-யும் வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது என்றால் மிகையில்லை. ஒரு காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் குறித்து கார்ப்ரேட் வட்டத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழ்நாட்டின் அடுத்த பெரிய தொழில் வளர்ச்சி பகுதியாக உருவெடுத்துள்ளது.

கோயம்புத்தூர்-க்கு போட்டியாக உருவெடுக்கும் தூத்துக்குடி.. லட்டு மாதிரி 6 திட்டம்.. இது போதுமே..!!

பல முக்கிய திட்டங்கள் மற்றும் முதலீடுகள் மூலம், தூத்துக்குடி மாவட்டம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றத் தயாராகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் தலையெழுத்தை மொத்தமாக மாற்றப்போகும் 6 திட்டங்கள், இப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பு, வருமானத்தைப் பெரிய அளவில் உயர்த்துவது மட்டும் அல்லாமல் குட்டி சென்னையாக மாறும் வாய்ப்பை கொண்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகன துறை: வியட்நாம் நாட்டின் எலக்ட்ரிக் வாகன (EV) உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட்டின் புதிய ஆலை தூத்துக்குடியில் வேகமாகக் கட்டி முடிக்கப்பட்டு வருகிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, 90% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன, மற்றும் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தூத்துக்குடியை இந்தியாவின் வாகனத் துறையில் ஒரு முக்கிய மையமாக மாற்றும்.

ஐடி துறை: தகவல் தொழில்நுட்பத் துறையை ஊக்குவிக்கும் வகையில், 4.16 ஏக்கர் பரப்பளவில், G+4 தளங்களுடன் 63,100 சதுர அடி கட்டப்பட்ட பரப்பளவைக் கொண்ட TIDEL NEO மினி IT பூங்கா தூத்துக்குடியில் திறக்கப்பட்டு இத்துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த நியோ டைடல் பார்க் திறப்பதற்கு முன்பே 100% அலுவலகங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஐடி பூங்கா தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் IT துறையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

விமானச் சேவை: தூத்துக்குடி மாவட்டம் அடுத்தடுத்து பல துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் தூத்துக்குடி விமான நிலையத்தை A321 போன்ற பெரிய விமானங்களைக் கையாளும் வகையில், புதிய முனையக் கட்டிடம் மற்றும் ஓடுபாதை நீட்டிப்பு உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது. இது நகரின் இணைப்பை மேம்படுத்துவதுடன், வணிக மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

இஸ்ரோ: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் SSLV ஏவுதள வளாகம் (SLC), தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் 2,350 ஏக்கரில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் மார்ச் 5, 2025 அன்று தொடங்கியது. இது இஸ்ரோவின் இரண்டாவது விண்வெளி துறைமுகமாக அமையும்.

பர்னிச்சர் பூங்கா: இந்தியாவின் முதல் பர்னிச்சர் பூங்கா தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 7, 2022 அன்று இப்பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். 1,156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா, தூத்துக்குடி VOC துறைமுகத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகமாகவும், ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய துறைமுகமாகவும் இருப்பதால், இப்பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த பூங்கா பல கட்டங்களாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில், ரூ.1,500-1,800 கோடி முதலீட்டில் 4-5 ஆண்டுகளில் செயல்படத் தொடங்கும், இதன் மூலம் 1.1-1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இரண்டாவது கட்டம் 8-10 ஆண்டுகளில் ரூ.3,500-4,500 கோடி முதலீட்டில் 3-3.5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். ஒட்டுமொத்தமாக, இப்பூங்கா ரூ.4,500 கோடிக்கு மேல் முதலீடுகளை ஈர்த்து, சுமார் 3.5 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும், இது தென் தமிழகத்தின் வாழ்வாதாரத்தைக் கணிசமாக மேம்படுத்தும்.

கிரீன் ஹைட்ரஜென்: இந்தியாவிலேயே முதல் மற்றும் பெரிய கிரீன் ஹைட்ரஜன் பூங்கா தூத்துக்குடியில் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாடு மட்டும் அல்லாமல் நாட்டின் கிரீன் ஹைட்ரஜன் ஹப் ஆக தூத்துக்குடியை மாற்றும். VOC துறைமுகத்தை மையமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

NTPC கிரீன் எனர்ஜி லிமிடெட் (NGEL), VOC துறைமுக ஆணையத்துடன் கிரீன் ஹைட்ரஜன் மையத்தை உருவாக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதோடு பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தூத்துக்குடியில் கிரீன் ஹைட்ரஜென் திட்டத்தை அமைக்கப் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது. தூத்துக்குடியில் தற்போது கிரீன் ஹைட்ரஜன் மட்டும் அல்லாமல் கிரீன் அம்மோனியா மற்றும் கிரீன் மெத்தனால் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் திட்டத்தையும் நிறுவனங்களழ் கொண்டு வந்துள்ளது.

சென்னைக்கு இணையாகத் துறைமுக இணைப்பும், கோயம்புத்தூர்-க்கு இணையாக திறன்வாய்ந்த தொழிலாளர் படையும் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்குப் பக்கபலமாக உள்ளது. இதோடு இந்த திட்டங்கள் அனைத்தும் நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து வளர்ச்சி அடையும் வாய்ப்பை கொண்டிருக்கும் காரணத்தால் சென்னை மற்றும் கோவை-க்கு இணையாக தூத்துக்குடி வளர்ச்சி அடையும்.

மேலும் தூத்துக்குடி தென்தமிழக உற்பத்தி துறையில் ஏற்றுமதி ஹப் ஆக இருக்கும் என்பதால் இம்மாவட்டத்தின் வளர்ச்சி வாய்ப்பு எண்ணில் அடங்காதது..!!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+