தூத்துக்குடி: தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லை அடுத்தடுத்து எட்டி வருகிறது. சமீபத்தில் திறக்கப்பட்ட தஞ்சாவூர் நியோ டைடல் பார்க் திறந்து முழுமையாக ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அனைத்து அலுவலக இடங்களும் முழுமையாக புக் செய்யப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
இந்த நிலையில் அடுத்து ஆச்சரியப்படுத்தும் விஷயமாக தூத்துக்குடி டைடல் நியோ பார்க் அமைந்துள்ளது. இன்று மாலை தமிழ்நாடு ஐடி மற்றும் தொழிற்துறை டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் மிகவும் முக்கியமான விஷயத்தை வெளியிட்டு உள்ளார்.

தூத்துக்குடியில் புதிதாகக் கட்டப்பட்ட TIDEL Neo IT Park இன்னும் சில நாட்களில் முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் நியோ டைடல் பார்க் திறப்பதற்குள்ளேயே முழுமையாக அனைத்து அலுவலக இடங்களும் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி தென்தமிழகத்தில் முக்கியமான தொழிற் பகுதியாக மாறிவரும் வேளையில் அலுலக இடங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது, இதைக் கருத்தில் கொண்டே தமிழ்நாடு அரசு இங்கு நியோ டைடல் பார்க் அமைப்ப முடிவு செய்தது. இந்த நிலையில் தூத்துக்குடி நியோ டைடல் பார்க் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படுவதற்கு முன்பே அனைத்து அலுவலகங்களும் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் தூத்துக்குடி உற்பத்தி நகரமாக மட்டும் அல்லாமல் ஐடி நகரமாக விரைவில் மாறி தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியோ டைடல் பார்க் திறப்பதற்கு முன்பு புக் செய்யப்பட்டு உள்ள நிலையில் இப்பகுதியில் ஐடி நிறுவனங்கள் அலுவலகங்கள் அமைப்பதற்கான ஆர்வத்தைப் பார்க்க முடிகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கவுள்ள இந்த மினி TIDEL பூங்கா, 4.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுமார் 50,937 சதுர அடி நவீன அலுவலக வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும், HVAC மற்றும் ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை அமைப்பு (IBMS) போன்ற மேம்பட்ட வசதிகளுடன் இந்த நியோ டைடல் பார்க் அமைந்துள்ளது.
திறமையான தொழிலாளர்களின் ஏராளமான கிடைக்கும் தன்மை மற்றும் வலுவான கட்டமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி IT நிறுவனங்களை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் 2ஆம் நிலை மற்றும் 3ஆம் நிலை நகரங்களில் நியோ டைடல் பார்க் என்கிற சிறிய அளவிலான டைடல் பார்க்குகளை திறந்து வருகிறது.
Thoothukudi TIDELNeo: தூத்துக்குடி மாவட்டத்தில், மீளவிட்டன் கிராமத்தில் தான் இந்த புதிய டைடல் நியோ பார்க் அமைந்துள்ளது, நவீன வசதிகளுடன் கூடிய 4.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தரைதளம் மற்றும் 4 அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்த அதிநவீன சிறிய ஐடி பூங்கா, 63,100 சதுர அடியுடன், டெக் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான சிறந்த அலுவலக இடங்களை வழங்குகிறது.
இந்த டைடல் பார்க்கில் வெறும் 3,200 சதுர அடியிலிருந்து அலுவலக இடங்கள் தொடங்குகிறது, அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் ஏற்றவாறு டைடல் நியோ தூத்துக்குடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வெறும் 3.1 கிமீ தொலைவிலும், தூத்துக்குடி நகரம் மற்றும் துத்தி மேலூர் ரயில் நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவிலும் அனைத்து தர போக்குவரத்திற்கும் ஏற்றவாறு தூத்துக்குடி டைடல் நியோ பார்க் அமைந்துள்ளது.
டைடல் நியோ பார்க்கிற்கும் தூத்துக்குடி விமான நிலையம் வெறும் 15.7 கிமீ தொலைவில் உள்ளது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications