தூத்துக்குடியில் இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. இனி கதையே மாறப்போகுது.. அந்த ரூ.8500 கோடி எதற்கு?!

தூத்துக்குடி என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது துறைமுக நகரம் என்பது தான், ஆனால் இனி அடித்த சில வருடத்தில் ஒரு ஹைய் டெக் நகரமாக மாறப்போகிறது. ஏற்கனவே வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைத்து இந்த மாவட்டத்தை ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக எலக்ட்ரானிக்ஸ் துறை-யின் வளர்ச்சிக்கு அடித்தளம் போடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி ஒரு புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி மையமாக உருவாகும் அளவுர்கு 2 முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் பயணத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு என 3 முக்கிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருதிறது.

தூத்துக்குடியில் இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. இனி கதையே மாறப்போகுது.. அந்த ரூ.8500 கோடி எதற்கு?!

இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு இரண்டு முக்கிய நிறுவனங்களுடன் சுமார் 8,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களை (MoUs) கையெழுத்திட உள்ளது. இந்த முதலீடு துல்லியமான துறையிலும் மற்றும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த 2 நிறுவனத்தின் வருகை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்லாயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தென்னிந்தியாவில் தொழில்மயமாக்கலுக்கான ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது. இதுவரையில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மாவட்டத்தில் மட்டுமே எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்புக்கான முதலீடுகளும், தொழிற்சாலைகளும் வந்த நிலையில், தூத்துக்குடியில் வந்துள்ளது முக்கியமான விஷயமாகவும், புதிய துவக்கமாகவும் பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடியில் இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. இனி கதையே மாறப்போகுது.. அந்த ரூ.8500 கோடி எதற்கு?!

Yeemak தொழிற்சாலை:
தென்கொரியாவைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான யீமாக் (Yeemak) மற்றும் அதன் குழு நிறுவனமான ஜீனுவ்ஸ் (Jeanuvs) தூத்துக்குடியில் சுமார் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய உள்ளன. இந்த முதலீட்டின் மூலம் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் (PCBs) தயாரிப்பு ஆலையை அமைப்பதற்காக பயன்படுத்தப்படும், இதனால் 7,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலை உள்ளூர் சந்தைகளுக்கு மட்டுமல்லாமல் சர்வதேச சந்தைகளுக்கும் பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய உள்ளது, இதனால் புதிய ஏற்றுமதி வாய்ப்புகள் உருவாகும். இந்த திட்டம் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

தூத்துக்குடியில் இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. இனி கதையே மாறப்போகுது.. அந்த ரூ.8500 கோடி எதற்கு?!

Kaynes தொழிற்சாலை:
EMS துறையில் (Electronics Manufacturing Services) முன்னணி நிறுவனமான கெய்ன்ஸ் (Kaynes) தூத்துக்குடியில் ஒரு புதிய உற்பத்தி ஆலையை அமைக்க ரூ.4,995 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த ஆலையில் 74 அடுக்கு PCBs, உயர் செயல்திறன் கொண்ட லாமினேட்டுகள், கேமரா மாட்யூல் தயாரிப்பு போன்றவற்றை உற்பத்தி செய்யும். இதனால் 4,700க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தென்னிந்தியாவுக்கு ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது புதிய தொழில்நுட்ப மையங்களை உருவாக்க உதவும். கெய்ன்ஸ் இது தமிழ்நாட்டில் தனது இரண்டாவது முக்கிய முதலீடாகும், இதன் முதல் முதலீடு சென்னையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்டது.

தூத்துக்குடி-யின் புதிய பரினாம வளர்ச்சி:
தூத்துக்குடியில் இந்த புதிய முதலீடுகள் தொழில்மயமாக்கலுக்கு ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யீமாக் மற்றும் கெய்ன்ஸ் நிறுவனங்களின் முதலீடுகள் வெறும் துவக்கம் தான், இந்த முதலீடுகள் பல தொடர்புடைய தொழில்களையும் இப்பகுதியில் ஈர்க்க ஊக்குவிக்கப்படும்.

இதனால் பல நிலைகளில் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உருவாகலாம். இந்த முதலீடுகள் மூலம் உள்ளூர் மக்களுக்கு திறமைகளை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்களை கற்கவும் வாய்ப்பு கிடைக்கும். இதேவேளையில் இப்பகுதியில் இருக்கும் மக்கள் புதிய தொழில்நுட்பத்தை விரைவாக கற்றுக்கொண்டு வேகமாக திறன் வளர்த்துக்கொள்வது மூலம் வேலைவாய்ப்புகளை எளிதாக பெற முடியும்.

தூத்துக்குடியில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் வந்துள்ள 8500 கோடி ரூபாய் முதலீடு தென் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, சர்வதேச அளவில் போட்டி திறனை உயர்த்தும் என்று நம்பப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+