தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டின் எலக்ட்ரிக் வாகன நிறுவனமான வின்ஃபாஸ்ட் 2 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. ஆனால், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ் மானியங்கள் எப்போது எப்படி வழங்கப்படும் என்பது குறித்த குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் வியட்நாம் நாட்டின் வின்ஃபாஸ்ட் முதலீட்டில் தேக்க நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் புதிய EV கொள்கைக்கும், வின்பாஸ்ட் முதலீட்டுக்கும் என்ன பிரச்சனை..?
கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 18) கனரக தொழில் துறை அமைச்சக அலுவலகத்தில் (Ministry of Heavy Industries - MHI) நடைபெற்ற கூட்டத்தில் வின்ஃபாஸ்ட் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி ஃபாம் சான் சவு பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் மத்திய அரசின் புதிய EV கொள்கையின் கீழ் மானியங்கள் கிடைக்காது என அறிந்த பிறகு குழப்பமடைந்தார் என்று, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டாரங்கள் பிசினஸ்லைன் பத்திரிக்கையிடம் தெரிவித்தன.
“வியட்நாம் தலைநகர் ஹனோய்-ல் இருந்து வீடியோ கான்பிரென்ஸ் மூலம் கூட்டத்தில் கலந்து கொண்ட வின்ஃபாஸ்ட் தலைமை செயல் அதிகாரி, எந்த நிறுவனமாக இருந்தாலும், புதிய EV கொள்கையின் கீழ் மானியம் பெற விரும்பினால், கொள்கை அமலுக்கு வந்த நாளுக்கு பின்பு தான் பெற முடியும், முதலீடு தொடங்கிய தேதியிலிருந்து அல்ல,” என்று மத்திய கனரக தொழில் துறை அமைச்சக செயலாளர் விளக்கம் அளித்த பிறகு குழப்பமடைந்தார் தகவல் வெளியாகியுள்ளது.
கனரக தொழில் துறை அமைச்சக செயலாளர் கம்ரான் ரிஸ்வி மற்றும் கூடுதல் செயலாளர் ஹனிஃப் குரேஷி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா, மருதி சுசூகி இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், டொயோட்டா கிரலோஸ்கர் மோட்டார் மற்றும் விண்ட்ஃபாஸ்ட் உள்ளிட்ட முன்னணி வாகன நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஜனவரி மாதம் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் நடைபெற்ற கூட்டத்தில், வின்ஃபாஸ்ட் தலைமை செயல் அதிகாரி உட்பட நிறுவனத்தின் தலைமைக்கு, ஒரு நிறுவனம் இந்தியாவில் முதலீடு தொடங்கும் நாளிலிருந்து மானியங்கள் கிடைக்கும் என்ற தெளிவான கூறியிருந்தார்.
இதனை ஏப்ரல் 18 ஆம் தேதி MHI அதிகாரிகளுடனான கூட்டத்தில் விண்ட்ஃபாஸ்ட் தலைமை செயல் அதிகாரி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த MHI செயலாளர், முதலீடு தொடங்கிய தேதியிலிருந்து அல்ல, கொள்கை அமலுக்கு வந்த பிறகு தான் மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வின்ஃபாஸ்ட் மற்றும் தமிழ்நாடு அரசு ஜனவரி 6ஆம் தேதியன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வின்பாஸ்ட் 2 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டன.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக தொடக்க தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை, $500 மில்லியனாக முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கப்படும். வின்ஃபாஸ்டின் ஒருங்கிணைந்த எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையில் 3,000-3,500 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சகம் விளக்கம்: கனரக தொழில் துறை அமைச்சக (MHI) அதிகாரிகள், வின்ஃபாஸ்ட் தலைமை செயல் அதிகாரிக்கு, முதலீடு தொடங்கிய நாளிலிருந்து மானியங்கள் கிடைக்காது என்பதை உறுதிபடுத்தியுள்ளனர். இது தவிர, அரசாங்கத்தால் வேறு சில விஷயங்களும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன.
முதலீட்டு காலக்கெடு: “இதில் எதோ ஒரு தவறான புரிதல் இருந்திருக்கலாம்... வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு, ஐந்தாவது ஆண்டிற்குள் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்ய முடியும் என்று தவறாகப் புரிந்துகொண்டிருந்தது. ஆனால், மத்திய அரசின் புதிய கொள்கையானது, மூன்றாம் ஆண்டிற்குள் 500 மில்லியன் டாலர் முதலீட்டை முடிக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.
மூன்றாம் ஆண்டில், 500 மில்லியன் டாலர் முதலீட்டை முடித்து, 25 சதவீத உள்நாட்டு மதிப்பு கூட்டு (Domestic Value Addition - DVA) கொண்டு வாகனங்கள் உற்பத்தி தொடங்க வேண்டும்,” என்று ஒரு அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
வங்கி கேரண்டி: முதல் மூன்று ஆண்டுகளில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யாவிட்டால், வங்கி கேரண்டி செல்லாது என்று கொள்கை தெளிவாகக் மத்திய அரசின் EV கொள்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதலீட்டு கணக்கீடு: இரண்டாவதாக, ஜனவரி முதல் தூத்துக்குடியில் செய்யப்படும் முதலீடு (ஆலை கட்டுமானம் தொடங்கிய நாளிலிருந்து) கணக்கிடப்படும் என்று அவர்கள் நினைத்திருந்தனர். ஆனால், கொள்கையின் படி, 240 நாட்களுக்குப் பிறகு மட்டுமே அது கணக்கிடப்படும்.
முதல் 120 நாட்கள் (நான்கு மாதங்கள்) விண்ணப்ப காலம் (application window) என்று அழைக்கப்படுகிறது, பின்னர் MHI திட்டத்தை மதிப்பீடு செய்து உறுதிப்படுத்த 120 நாட்கள் அவகாசம் உள்ளது. அமைச்சகத்திடமிருந்து உறுதிப்படுத்தல் கடிதம் வந்த பிறகுதான் முதலீட்டு சுழற்சி தொடங்கும், அதாவது அவர்களின் முதலீட்டு சுழற்சி எட்டு மாதங்களுக்குப் பிறகுதான் தொடங்கும், என்று அந்த அதிகாரி விளக்கினார்.
முதலீட்டு திட்டம் தொடருமா..?: வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் 2 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டம் தொடர்ந்து நடைபெறுமா என்பது இப்போது கேள்விக்குறியாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மானியங்கள் மற்றும் முதலீட்டு விதிமுறைகள் குறித்த தெளிவற்ற தகவல்களால் இந்த திட்டம் பாதிக்கப்படலாம் என்று கவலைகள் எழுந்துள்ளன.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications