சென்னை: காற்று மாசு பிரச்சினை இந்தியாவின் தலையாய பிரச்சினையாக இருக்கிறது. டெல்லி உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் காற்று மாசு அளவு அபாயகட்டத்தை தாண்டி இருக்கிறது. எனவே அரசு காற்று மாசுக்கு அதிகளவில் வித்திடும் பழைய வாகனங்களின் பயன்பாட்டை தடுக்க புது யுக்தியை கையில் எடுத்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசு: இந்தியாவில் பிஎஸ் 2 விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் அதிக புகையை வெளியிடுவதால் அவை சுற்றுச்சூழலில் அதிக மாசை ஏற்படுத்துகின்றன என மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இத்தகைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து படிப்படியாக நீக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பழைய வாகனங்களுக்கான பதிவு புதுப்பித்தல் கட்டணத்தை அரசு திடீரென உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

வாகன பதிவு : இந்தியாவில் நாம் சொந்தமாக ஒரு வாகனத்தை வாங்கும் போது அதனை பதிவு செய்வது கட்டாயம், இந்த பதிவு 15 ஆண்டுகளுக்கு பின் காலாவதி ஆகிவிடும். அதன் பின்னர் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் வாகன பதிவை புதுப்பித்து கொள்வது கட்டாயம். இந்த சூழலில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 20 ஆண்டுகளுக்கும் பழமையான வாகனங்களை வைத்திருப்பவர்கள் அந்த வாகனங்களை பதிவு செய்வதற்கு இனி கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும்.
20 ஆண்டுகள் பழமையான வாகனங்கள்: எனவே மக்கள் தாங்களாகவே பழைய வாகனங்களை கைவிட்டு புது வாகனங்களை வாங்க முன் வருவார்கள் சுற்றுச்சூழல் மாசும் குறையும் என்பதற்காகவே அரசு இப்படி ஒரு நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 20 ஆண்டுகளுக்கும் பழமையான இலகு ரக வாகனங்களுக்கான பதிவு புதுப்பித்தல் கட்டணம் 5 ,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல 20 ஆண்டுகள் பழமையான இருசக்கர வாகனங்களுக்கான வாகன பதிவு புதுப்பித்தல் கட்டணம் 1,000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும், மூன்று சக்கர வாகனங்களுக்கு 1500 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
பதிவு புதுப்பித்தல் கட்டணம் உயர்வு: இதுவே இறக்குமதி செய்யப்பட்ட இருசக்கர் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான பதிவு புதுப்பித்தல் கட்டணம் 20,000 ரூபாயாகவும் இறக்குமதி செய்யப்பட்ட நான்கு சக்கரம் அல்லது அதற்கு மேல் சக்கரங்களை கொண்ட வாகனங்களுக்கான பதிவு கட்டணம் 80,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை குறிப்பிட்டு இருக்கிறது.
ஆகஸ்ட் 20 முதல் அமல்: முன்னதாக மத்திய அரசு சுற்றுச்சூழல் மாசை குறைப்பதற்காக பழைய வாகனங்களின் பயன்பாட்டை தடுக்க வாகனங்களுக்கான பதிவை புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக கடந்த பிப்ரவரி மாதமே ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டது. அது தற்போது இறுதி செய்யப்பட்டு சட்டமாக நடைமுறைக்கு வந்திருக்கிறது . ஆகஸ்ட் 20ஆம் தேதியிலிருந்து இந்த வாகன பதிவு புதுப்பித்தல் கட்டணம் நடைமுறைக்கு வந்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது . 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications