அமெரிக்க CEO-வுக்கு பன்றி தலையை பார்சலில் அனுப்பிய மர்ம நபர்.. எல்லாத்துக்கும் காரணம் இந்த AI தான்.!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) ஒரு அதிர்ச்சிகரமான அனுபவத்தை சந்தித்துள்ளார். அவர் வீட்டிற்கு ஒரு வெட்டப்பட்ட பன்றி தலை மற்றும் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் வேகாஸில் உள்ள Agrippa எனும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO-வாக Blake Owens இருக்கிறார். அவர் சமீபத்தில் சொத்து வாங்கும் ஒப்பந்தத்தில் (real estate deal) செயற்கை நுண்ணறிவு பயன்படுத்திய அனுபவத்தைப் பற்றி பகிர்ந்திருந்தார். அதன் பிறகு தான் இந்த பார்சல் அவருக்கு வந்துள்ளது.

அமெரிக்க CEO-வுக்கு பன்றி தலையை பார்சலில் அனுப்பிய மர்ம நபர்.. எல்லாத்துக்கும் காரணம் இந்த AI தான்.!

அந்த கடிதத்தில் AI பயன்பாட்டை கடுமையாக விமர்சித்திருந்தனர். Blake Owens மீது தனிப்பட்ட முறையில் அவதூறாக விமர்சனங்கள் இருந்தன. அவரை "Clark Kent knockoff" என வேறுபாடான முறையில் பேசி தவறாக பேசியிருந்தனர். கடிதத்தின் இறுதியில் மிகப்பெரிய எச்சரிக்கையாக, Don't get greedy because pigs get fat and hogs get slaughtered" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சி சிலரிடையே எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. சிலர், ஏஐ மனிதர்களின் வேலைவாய்ப்பை கேள்விக்குள்ளாக்கும் என்று நம்புவதால், இந்த மாதிரியான அச்சுறுத்தல்கள் தோன்றுகின்றன. இது போன்ற தாக்குதல் நிகழ்வுகள், ஏஐ வளர்ச்சிக்கு எதிரான ஒரு தீவிர மனநிலை சில சமூகங்களில் உருவாகியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Blake Owens தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஆனால் இந்தச் சம்பவம் அவரை அடைய வைத்துள்ளது. இந்த அச்சுறுத்தும் பார்சல் ஜூலை 29ஆம் தேதி, Blake Owens-ன் குடும்ப வீட்டு முகவரிக்கு நேரடியாக தபால் மூலம் அனுப்பப்பட்டது.

இந்தக் கடிதம் 'M' என்ற ஒரு எழுத்தால் மட்டுமே கையெழுத்திடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில், "லாஸ் வேகாசில் நீ பேசிய மார்கஸ் வீடியோ பார்த்தேன். மிகவும் கேலிக்குரியது. உண்மையில் உனக்கு ரியல் எஸ்டேட் பற்றி தெரியவே தெரியவில்லை. அது டெவலப்பர்கள் அல்லது முதலீட்டாளர்களால் உருவாக்கப்பட்டதல்ல.

அது Lululemon உடைகள் அணிந்த தொழில்நுட்ப நபர்களால் உருவாக்கப்பட்டதும் அல்ல. அது ப்ரோக்கர்களால் கட்டப்பட்டது. நாங்கள் கஷ்டப்பட்டு கட்டினோம். சுருக்கப்பட்ட பாதை இல்லை, தொழில்நுட்பம் இல்லை, மக்கள் மட்டுமே. எனவே, உன்னுடைய அந்த ஒரு நிமிட வெற்றியை அனுபவி. ஆனால் ஆசைப்படாதே 'Pigs get fat and hogs get slaughtered'."

இச்சம்பவம் குறித்து Blake Owens கூறுகையில், "ஒருவர் என் வீட்டுக்கு இறந்த மிருகத்தையே அனுப்புவார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. இது 'The Godfather' படம் போல் இருக்கிறது"என கிண்டலாக கூறியுள்ளார். மேலும், இது ஒரு உண்மையான எச்சரிக்கை. ஆனால், நேரடி உயிர் ஆபத்தாக எனக்குத் தோன்றவில்லை. இது ஒரு 'சந்தேஷம்' என்பதை மட்டும் நன்றாக உணர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பார்சலை அனுப்பிய நபர், தனது தொழிலில் நன்றாக செல்வதில்லை என்றும், அதற்குள் AI பற்றி வரும் செய்திகளைப் பார்த்ததும், வேலை இழக்கப்போகிறேன் என்ற பயத்தால் இந்த மாதிரியான செயலில் ஈடுபட்டிருக்கலாம் என நம்புகிறேன். அந்த நபரின் வாழ்க்கை சிரம நிலையில் இருக்கலாம். எனவே, அவர் வெளிப்படுத்திய அதிருப்தியை நான் உணருகிறேன். அவர் யார் என்று தெரிய வந்தாலும், நான் போலீசில் புகார் கொடுத்து குற்றச்சாட்டு விசாரணை நடத்த வேண்டாம் என விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் ஏஐ நுழைந்தது குறித்து பரபரப்புகள் அதிகரித்து வருகின்றன. வேலைவாய்ப்பு, மனித ஈடுபாடு குறையும் என நினைக்கும் ஒரு பகுதியினர், தொழில்நுட்ப வளர்ச்சியை எதிர்த்து வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+