இதுக்கு கூடவா வருமான வரி நோட்டீஸ் அனுப்புவாங்க? மக்களே கவனம்!!

இந்தியாவில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கின்றன. வழக்கமாக இந்தியாவில் ஜூலை 31ஆம் தேதி தான் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள். ஆனால் இந்த ஆண்டு வருமான வரித்துறை , கணக்கு தாக்கலுக்கான படிவங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. எனவே செப்டம்பர் 15ஆம் தேதி வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக நீட்டித்தது .

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு கூடுதலாக 45 நாட்கள் கால அவகாசம் கிடைத்திருக்கிறது. செப்டம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் என்பதால் ஏராளமானவர்கள் தங்களுடைய வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் மேற்கொள்ளும் ஒரு சிறிய தவறு கூட வருமானவரி துறையின் நோட்டீசை பெறுவதற்கான ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தந்து விடும்.

இதுக்கு கூடவா வருமான வரி நோட்டீஸ் அனுப்புவாங்க? மக்களே கவனம்!!

DIME நிறுவனத்தின் நிறுவனரான சந்திரலேகா கடந்த ஆண்டு மட்டும் சுமார் 2 கோடி பேர் தவறாக வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யப்பட்டதற்கான நோட்டீசை பெற்று இருக்கிறார்கள் என சுட்டிக்காட்டி இருக்கிறார். இந்த நோட்டீஸ் அவர்களுக்கு வந்ததற்கு ஒரு சிறிய தவறுதான் காரணம் என்கிறார். அது என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

E-verify : வருமான வரி கணக்கு இணையதளத்தில் சென்று கணக்கினை தாக்கில் செய்வதோடு மட்டும் அந்த பணி முழுமை அடைவது கிடையாது. அதனை E-verify எனப்படும் மின்னணு சரிபார்ப்பு செய்வது கட்டாயம். பெரும்பாலான நபர்கள் இவ்வாறு செய்யாமல் விட்டு விடுகின்றனர். இதனால் அவர்களுடைய வருமான வரி கணக்கு தாக்கல் என்பது முழுமை பெறாமல் நோட்டீஸ் பெரும் நிலைக்கு ஆளாகின்றனர்.

கடந்த ஆண்டு மட்டும் 32 லட்சம் பேர் தங்களுடைய வருமானவரி கணக்குத் தாக்கலை E-verify செய்யாததற்காக நோட்டீசை பெற்றனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பின் 30 நாட்களுக்குள் E-verify செய்து முடிக்கவில்லை என்றால் நீங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததையே அரசு ஏற்றுக்கொள்ளாது . உங்களுக்கான ரீஃபண்டும் கிடைக்காது. எனவே நீங்கள் புதிதாக கணக்கு தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். அதற்கு 5000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

Annual information Statement: ஏஐஎஸ் எனப்படும் ஆண்டு தகவல் அறிக்கையில் உள்ள விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். உதாரணமாக உங்களுக்கு வட்டி வருமானமாக 50,000 ரூபாய் வங்கியில் இருந்து வந்திருக்கிறது என வைத்துக் கொள்வோம். ஆனால் ஆண்டு தகவல் அறிக்கையில் அது 55,000 ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருக்கலாம். ஏனெனில் அதில் டிடிஎஸ் தொகையும் சேர்த்து காட்டும் . எனவே இந்த சின்ன சின்ன விஷயங்களை கூட நீங்கள் சரியாக கண்காணிக்க வேண்டும் .

உங்களுடைய வங்கி அறிக்கை , பங்கு முதலீடு, ஈவுத்தொகை ஆகிய அனைதையும் ஆண்டு தகவல் அறிக்கையுடன் ஒப்பீடு செய்து அனைத்து எண்களும் சரியாக இருக்கிறதா என பாருங்கள் இல்லை என்றால் அதனை சரி செய்ய வேண்டும். இல்லை எனில் நீங்கள் தவறான கணக்கினை தாக்கல் செய்து விட்டீர்கள் என்பதற்கு நோட்டீசும் பெற வேண்டியது இருக்கும். இது பெரிய தலைவலியில் சென்று தான் முடியும்.

ஐடிஆர் படிவம்: வருமான வரி இணையதளத்தில் ஐடிஆர் 1, ஐடிஆர் 2, ஐடிஆர் 3, ஐடிஆர் 4 என நான்கு வகை படிவங்கள் இருக்கின்றன. இதில் தவறான படிவத்தில் கணக்கு தாக்கல் செய்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள் . மும்பையில் இது போல தவறான ஐடிஆர் படிவத்தை தேர்வு செய்து கணக்கு தாக்கல் செய்வதர் 1.46 லட்சம் ரூபாய் அபராதமாக செலுத்தினாராம் . எனவே உங்களுடைய வருமானம் எவ்வளவு அதற்கு எந்த ஐடிஆர் படிவத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை முறையாக தேர்வு செய்து கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் இல்லை என்றால் 200 சதவீதம் வரை அபராதம் பெறக் கூடும் என சொல்லப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+