இந்தியாவில் சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் எல்லாம் குப்பை பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது . பொதுமக்களில் சிலர் பொறுப்பில்லாமல் குப்பைகளை சாலைகளிலேயே வீசிவிட்டு செல்கிறார்கள்.
மாநகராட்சி தரப்பில் குப்பை வண்டிகள் மூலம் தூய்மை பணியாளர்கள் நாம் இருக்கும் பகுதிக்கே வந்து குப்பைகளை சேகரித்து செல்கிறார்கள். இருந்தாலும் ஒரு சிலர் பொறுப்பின்றி குப்பைகளை தெருக்களில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் நகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற அனைவரின் முயற்சியுமே வீணாகிப் போகிறது.

இந்த சூழலில் தான் தெருக்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நூதன தண்டனை விதிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் வந்து தங்கி இருந்து தொழில் புரிகிறார்கள் வேலை செய்கிறார்கள்.
இந்த நிலையில் பொதுமக்கள் சாலைகளில் குப்பைகளை வீசக்கூடாது என பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தொடர்ச்சியாக கூறி வருகிறது. இருந்தாலும் சிலர் அதனை பின்பற்றுவதே இல்லை. அவர்களுக்கு அபராதம் விதித்தாலும் கூட எந்த ஒரு மாற்றமும் காணப்படவில்லை . இந்த நிலையில் தான் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் ஒரு புதிய நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறது .
இதன்படி சாலைகளில் குப்பை கொட்டுபவர்களை அடையாளம் கண்டு அதன் பிறகு குப்பைகளை கொண்டு சென்று அவர்களின் வீடு முன்பே கொட்டும் ஒரு நூதன தண்டனையை வழங்க தொடங்கி இருக்கின்றனர் . முதல் கட்டமாக சுமார் 200க்கும் அதிகமான வீடுகளின் முன்பு இப்படி குப்பைகளை கொட்டி இருக்கின்றனர். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் தற்போது பலராலும் பகிரப்படும் விஷயமாக மாறி இருக்கிறது.
பொது இடங்களில் மக்கள் குப்பை கொட்டினால் அவர்களை கண்காணித்து அபராதம் வசூல் செய்வதற்காக பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் கண்காணிப்பு கேமராக்களையும் மார்ஷல்களையும் நியமனம் செய்திருக்கிறது. இருந்தாலும் இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்கவில்லை. இதனால் தான் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதன்படி யாரெல்லாம் தெருக்களில் குப்பைகளை கொட்டுகிறார்களோ அவர்களை கண்டுபிடித்து அவர்களின் வீட்டின் முன்பு அதிகாரிகளும் தூய்மை பணியாளர்களும் குப்பைகளை கொண்டு சென்று கொட்டி அபராதம் விதிக்க தொடங்கி இருக்கின்றனர். இவ்வாறு செய்யும் போது அந்த அவமானத்திலாவது அந்த மக்கள் மீண்டும் இது போன்ற தவறுகளை செய்யாமல் இருப்பார்கள் என அரசு நம்புகிறது.
ஒரே நாளில் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டிருக்கிறது என கூறும் மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் அதேபோல குப்பைகளை வீடு தேடி வரக்கூடிய தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது முறையாக குப்பை தொட்டிகளில் போட வேண்டுமென கூறியுள்ளனர். நகரை தூய்மையாக வைத்து கொள்வது தான் தங்களின் முன்னுரிமை என கூறுகின்றனர். 2000 முதல் 10000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications