அமேசான் நிறுவனம் செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த பணிநீக்கத்திற்கு தனது அதிருப்தியை தெரிவிக்கும் விதமாக தைரோயார் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான டாக்டர் ஆரோக்கியசாமி வேலுமணி, தனது X பதிவில் பணிநீக்கத்தால் ஊழியர்களுக்கு ஏற்படும் மனவருத்தம் குறித்து பகிர்ந்துள்ளார்.
பெரு நிறுவனங்களில் வேலை கிடைத்தவுடன் மக்கள் எப்படி அதை கொண்டாடுவார்கள்.. பின்னர் இது போன்ற எதிர்பாராத பணிநீக்கம் ஏற்பட்டால் அவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சல் ஏற்படும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆரோக்கியசாமி வேலுமணி தனது X பதிவில், "அமேசான் போன்ற பெரிய பிராண்டு நிறுவனத்தில் தேர்வாகி வேலை வாய்ப்பு கிடைத்தவுடன் எத்தனை பேர் கொண்டாடியிருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.. இப்போது அதே நபர்கள் தான் மன அழுத்தத்திலும் இருப்பார்கள். 10 அல்லது 20 அல்ல.. 100 அல்லது 200 அல்ல, 1000 அல்லது 2000 அல்ல, 14,000 ஊழியர்கள்! வாழ்க்கையில் எந்த ஒரு வெற்றியாக இருந்தாலும் அதை வெகு சீக்கிரம் கொண்டாடாதீர்கள்! அது தொழிலாக இருந்தாலும் சரி.. வணிகமாக இருந்தாலும் சரி! இது இரண்டுமே ஒரு மாரத்தான் பந்தயம் போன்றது", என்று எழுதியிருந்தார்.
பணி நீக்கம் தொடர்பாக வெளியான பல அறிக்கைகள் அமேசான் நிறுவனம் 14,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததாக கூறினாலும்.. நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வரவில்லை. உலக அளவில் தொழில்நுட்ப பணிநீக்கங்களை கண்காணிக்கும் Layoffs.fyi இணையதளத்தில் உள்ள தரவுகளும் அமேசானில் பணி நீக்கம் எதுவும் நடந்ததாக தெரிவிக்கவில்லை.
Layoffs.fyi இணையதளத்தின் தகவல்படி, 2025-ஆம் ஆண்டில் இதுவரை 87 IT நிறுவனங்களில் சுமார் 23,054 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் அமேசான் நிறுவனம் அதன் பேஷன் மற்றும் பிட்னஸ் பிரிவில் சில ஊழியர்களைக் குறைத்தது. அப்போது நாடு முழுவதும் உள்ள 200 ஊழியர்களை இந்த பணி நீக்கம் பாதிக்கும் என்று அமேசான் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியிருந்தார்.
அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள அதன் கடைகள் மற்றும் விற்பனை பிரிவிலும் சில மாற்றங்களை செய்து வருகிறது. உள் கட்டமைப்பு வசதிகளையும் மாற்றியமைத்துள்ளது .இந்த மாற்றங்கள் மூலம் நிறுவனம் சிறப்பாக செயல்பட திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை வழங்குவது மற்றும் விற்பனையை அதிகரிப்பது போன்ற சிஷயங்களை சிறப்பாக்க இலக்கு வைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தான் சில ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அமேசான் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications