மும்பை: இந்தியாவில் ஆட்டோ ஓட்டுநரின் மகன் ஐஐடியில் படிக்கச் செல்லும் போது, ஆடம்பர ஹோட்டல்கள் ஆட்டோக்களை அனுமதிக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய முரண் என தைரோகேர் நிறுவனர் வேலுமணி அவர்கள் எழுப்பி இருக்கும் கேள்வி சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
தைரோகேர் நிறுவனர் வேலுமணி பல ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு உரிமையாளராக இருந்தாலும் எங்கு சென்றாலும் வாடகை கார் மற்றும் ஆட்டோவில் தான் பயணம் செய்வார். அப்படி பயணம் செய்யும் போது தனக்கு கிடைக்கும் அனுபவங்களை அவர் பதவிடுவார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள வேலுமணி மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருந்தபோது தான் ஆட்டோவில் பயணம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போது ஆட்டோ ஓட்டுனர் உடனான கலந்துரையாடல் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த ஆட்டோ ஓட்டுனர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார் ஒரு நாளைக்கு 12-ல் இருந்து 14 மணி நேரம் இவர் வேலை செய்வாராம். என்னுடைய மகனுக்காக தான் நான் இவ்வளவு நேரம் உழைக்கிறேன் என அவர் கூறினாராம். அதற்கு உங்களுடைய மகன் என்ன படித்து வருகிறார் என கேட்ட போது ஐஐடி ஐதராபாத்தில் மூன்றாமாண்டு படிப்பதாக கூறினாராம்.
மகனின் கல்வி கட்டணம் அதிகமாக இருப்பதால் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் ஆட்டோ ஓட்டுகிறேன் என கூறினாராம். இந்த பதிவில் நான் இவருடனான கலந்துரையாடலில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் என குறிப்பிட்டுள்ள வேலுமணி ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு செல்லதான் ஆட்டோவில் சென்றேன்.
ஆனால் ஆட்டோவை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என அங்கிருந்தவர்கள் கூறிவிட்டனர். எனவே நான் கேட்டிலேயே இறங்கி நடந்து தான் சென்றேன். இந்தியாவில் ஆட்டோ ஓட்டுனரின் மகன் படிப்பால் ஐஐடி கல்வி வளாகம் வரை செல்ல முடிகிறது . ஆனால் இன்னமும் ஆட்டோக்களை 5 நட்சத்திர ஓட்டல்களில் அனுமதிக்க மறுக்கிறார்கள் இது எவ்வளவு ஒரு முரண் என கூறியுள்ளார்.
வேலுமணியின் இந்த பதிவுக்கு பலரும் எதிர்வினை ஆற்றியுள்ளனர். அந்த தந்தையின் உழைப்பை பலரும் புகழ்ந்துள்ளனர் .அந்த ஹோட்டல் பெயரை நீங்கள் வெளிப்படையாக தெரிவித்திருக்க வேண்டும் என ஒரு பயனர் கூறியுள்ளார்.
ஒரு பயனர் இதுபோன்ற கடின உழைப்பாளிகள் தான் நாட்டின் எதிர்காலமாக இருக்கின்றனர் என கூறியுள்ளார். பல்வேறு ஐந்து நட்சத்திர விடுதிகளும் இவ்வாறு ஆட்டோக்களை அனுமதிக்காமல் இருப்பது முரணாக இருக்கிறது எனவும் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களையும் பலரும் பதிவு செய்துள்ளனர்.
கோவையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த வேலுமணி இந்தியாவில் தைராய்டு உள்ளிட்ட பரிசோதனைகளை எளிமையாக்கி தைரோகேர் நிறுவனத்தை தொடங்கி வெற்றி அடைந்தார். ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தைரோகேர் நிறுவனத்தை தொடங்கினார். இவர் 2021 ஆம் ஆண்டு 4500 கோடி ரூபாய்க்கு தைரோகேர் நிறுவனத்தை விற்பனை செய்தார்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications