தைரோகேர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஏ.வேலுமணி சமுகவலைத்தளத்தில் அவ்வப்போது செய்யும் பதிவுகள் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியமானதாகவும், முக்கியமானதாகவும் விளங்கி வருகிறது. இந்த நிலையில் வேலுமணி அவர்கள் சமீபத்தில் செய்த ஒரு பதிவு இன்றைய தலைமுறை பெற்றோர்களுக்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.
இன்றைய இளம் பெற்றோர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகள் இந்த போட்டி மிகுந்த உலகில் சூப்பர்ஸ்டாராக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் பல வகையில் அவர்களை மெருகேற்றி வருகின்றனர். இத்தகைய முயற்சி சரியான திசையில் செல்கிறதா என்பதை வேலுமணி அவர்களின் பதிவு சுய பரிசோதனை செய்துக்கொள்ள உதவுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
வேலுமணி அவர்களின் பதிவில் பிள்ளைகளின் இன்டெலிஜென்ஸ் மற்றும் ஸ்டாமினா இடையேயான சமநிலை குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது.

இன்டெலிஜென்ஸ் மற்றும் ஸ்டாமினாவின் சமநிலை:
டாக்டர் வேலுமணியின் பதிவு, ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் இன்டெலிஜென்ஸ் மற்றும் ஸ்டாமினா எவ்வளவு முக்கியம் என்பதை விளக்குகிறது.
ஒரு குழந்தை அதிகப்படியான இன்டெலிஜென்ஸ் இருந்தும் குறைவான ஸ்டாமினா இருந்தால் தங்கள் வாழ்க்கையை அவர்கள் சிரமப்படுவார்கள் (Suffers), அதேபோல அதிகப்படியான ஸ்டாமினா இருந்தும் குறைவான இன்டெலிஜென்ஸ் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து போராடி (survives) நடத்த முடியும் அளவுக்கான திறன்களை பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.
ஆனால், இரண்டும் அதிகமாக உள்ள குழந்தைகள் தலைமை (Leads) பொறுப்புகளை ஏற்று நடத்தும் அளவுக்கு திறன்களை பெற்று இருப்பார்கள். இன்டெலிஜென்ஸ் மற்றும் ஸ்டாமினா இரண்டும் குறைவாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் தோல்வியடைய வாய்ப்புகள் அதிகம் என தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையில் ஒரு புதிய பார்வையை தருகிறது.
ஸ்டாமினா:
இதில் ஸ்டாமினா என்பது உங்கள் சக மாணவர்களையோ அல்லது நண்பர்களையோ விட வேலைகளை சிறப்பாகவும், வேகமாகவும் செய்யும் திறன் ஆகும். இதோடு, வேலை செய்யும் நேரத்தில் மிகவும் கவனமாக இருக்கும் தன்மையும், ஒழுக்கமாக இருப்பது மிகவும் முக்கியம். இது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உங்களை வலுவாக்கும்.
பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுரை:
டாக்டர் வேலுமணி பெற்றோர்களுக்கு இந்த பதிவு மூலம் முக்கியமான அறிவுரையை கொடுத்துள்ளார். இதில் பிள்ளைகளின் இன்டெலிஜென்ஸை மட்டும் வளர்ப்பதை விட, டீனேஜ் வயது முடியும் முன்பு ஸ்டாமினாவையும் கட்டமைக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்த ஸ்டாமினா உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிள்ளைகளை வலுவாக்கி, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள உதவும்.
இன்றைய உலகில், பிள்ளைகளை அதிகமாக பராமரிப்பது (Pamper) அவர்களுக்கு நல்லதல்ல, அதற்கு பதிலாக தன்னம்பிக்கையையும் ஸ்டாமினா-வை வளர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். இன்று பெரு நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் மத்தியிலான இடைவெளி பெரிய அளவில் குறைந்திருக்கும் காரணத்தால் இந்த அறிவுரை நகரம் மற்றும் கிராமங்களில் இருக்கும் பெற்றோர்களுக்கு பெரிய அளவில் உதவும்.
இந்த அறிவுரை, அடுத்த தலைமுறை இளைஞர்களின் எதிர்கால வெற்றிக்கு இன்டெலிஜென்ஸ் மட்டுமல்ல, உடல் மற்றும் மனதின் பலத்தையும் சேர்த்து வளர்க்க வேண்டிய அவசியத்தை காட்டுகிறது. பிள்ளைகளின் இளம் பருவத்திலேயே தங்கள் திறமைகளை கண்டறிந்து, அதற்கு ஏற்ப வளர்க்க வேண்டும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications