சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைப்பதில் தீவிரமாக இருக்கிறது தமிழக அரசு. இதற்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்ற வருகின்றன.
விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்புதல்களையும் தமிழ்நாடு அரசு பெற்றுவிட்டது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து விட்டால் ஒப்பந்த புள்ளி கோரி கட்டுமான பணி தொடங்கப்படும். முதலில் தமிழ்நாடு அரசு 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள்ளாக நிலம் கையகப்படுத்தும் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு 2026 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே கட்டுமான பணிகளை தொடங்குவது என திட்டமிட்டு இருந்தது. ஆனால் குறிப்பிட்ட சில கிராம மக்கள் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் நிலங்களை வழங்காமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தாமதம் ஏற்பட்டு விமான நிலைய பணிகளும் தள்ளிப்போன வண்ணமே இருக்கிறது. விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் வழங்கிய 13 கிராமங்களை சேர்ந்த குடும்பங்களுக்கான ரீசெட்டில்மெண்ட் பிளானின் ஒரு பகுதியாக தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோ அவர்களுக்கு வழங்குவதற்கான மாதிரி வீடுகளை தயாரித்து வைத்திருக்கிறது.
இந்த மாதிரி வீடுகள் பரந்தூரில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு வடிவமைப்புகளில் 400 சதுர அடி பரப்பளவில் ஒவ்வொரு மாடல் வீடுகளும் கட்டப்பட்டிருக்கின்றன. கிராம மக்கள் வந்து இவற்றை பார்த்து இதில் தங்களுக்கு பிடித்த வடிவமைப்பை தேர்வு செய்யலாம் என டிட்கோ மேலாண்மை இயக்குனர் சந்திப் நந்தூரி தெரிவித்திருக்கிறார். டைம்ஸ் ஆப் இந்தியாவில் இது தொடர்பான செய்தி வெளியாகியிருக்கிறது.

கிராம மக்கள் இந்த வீடு மாதிரி வீடுகளுக்குள் வரும்போது ஆடியோ உடன் கூடிய விஷுவல் ப்ளே செய்யப்படும் என்றும் இந்த பகுதியில் இந்த மக்களுக்கு என்னென்ன வசதிகள் இருக்கின்றன, அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைகள் என்னென்ன பள்ளிகள் உள்ளன ஆகிய அனைத்து விவரங்களும் அதில் சொல்லப்படுமாம். எனவே இவற்றினை அடிப்படையாகக் கொண்டு கிராம மக்கள் எந்த மாதிரியான வீடு தங்களுக்கு தேவை என்பதை முடிவு செய்து அரசிடம் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக தங்களுடைய வீடுகளையும் நிலங்களையும் விட்டுக் கொடுக்கக்கூடிய குடும்பங்களுக்காக அரசு சார்பாக வழங்கப்படும் நலத்திட்டங்களும் இந்த ஆடியோ விஷால் காட்சியில் இடம்பெற இடம் பெறும் என சொல்லப்படுகிறது. அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக தங்களுடைய வீடு , விவசாய நிலம் மற்றும் நிலங்களை வழங்க தயாராக இருக்கக்கூடிய விவசாயிகள் மற்றும் குடும்பத்தினருக்காக ஒரு நிவாரணத் திட்டத்தை ஜூன் மாதம் வெளியிட்டது.
இதன்படி ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு 35 லட்சம் ரூபாய் முதல் 60 லட்சம் ரூபாய் வரை நிதி சார்ந்த இழப்பீடு வழங்கப்படுகிறது. இது தவிர வீடுகளை வழங்கக்கூடிய நபர்களுக்கு வீட்டின் கட்டமைப்புக்கான மதிப்புக்கு நிதி இழப்பீடு வழங்கப்படுவது மட்டுமில்லாமல் அதற்கு மாற்றாக 400 சதுர அடி பரப்பளவில் ஒரு வீடு கட்டி தரப்படும் அல்லது அதற்கு பதிலாக 8 லட்சம் ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடைகளை இழப்பவர்களுக்கு வேறு இடங்களில் கடைகள் பெற்று தரப்படும், தொழில் தொடங்குவதற்கு கடன்கள் வழங்கப்படும் என பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்திருக்கிறது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications