கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ டெண்டர் வெளியிட்டுள்ளது. கோவில்பட்டி அருகே விமான பயிற்சி மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி தூத்துக்குடியில் ஏற்கனவே உள்ள விமான ஓடுதளத்தை மேம்படுத்தி விமான பயிற்சி மையமாக மாற்றப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோ டெண்டர் விடுத்துள்ளது. தற்போது தூத்துக்குடியில் உள்ள விமான ஓடுதளத்தை Dornier 228 உள்ளிட்ட விமானங்களை இயக்கி பயிற்சி செய்வதற்கான ஒரு மையமாக மாற்ற வேண்டும் என்பதே திட்டம்.

தற்போது தோனுகால் கிராமத்தில் 1.2 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 15 மீட்டர் அகலத்தில் விமான ஓடுதளம் அமைந்துள்ளது. இது கோவையை சேர்ந்த லட்சுமி மில்ஸ் நிர்வாகம் சார்பில் தங்களது தனி விமானத்தை இறக்குவதற்காக உருவாக்கப்பட்டது. பின்னர் வேறு சிலரும் இந்த ஓடுதளத்தை பயன்படுத்தியுள்ளனர். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இது பயன்பாட்டில் இல்லையென சொல்லப்படுகிறது.
தற்போது இந்த விரிவான திட்ட அறிக்கை என்பது விமான பயிற்சி மைய திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் விமான பயிற்சி மையமாக மாற்றுவதற்கான நடைமுறைகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். குறிப்பாக அனைத்து ஒழுங்குமுறை மற்றும் செயல்பாட்டு அனுமதிகளை பெறக்கூடிய வகையில் இந்த விமான பயிற்சி மையம் இருக்கும் வகையிலான திட்ட அறிக்கையாக இது தயாரிக்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்று தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் கோவில்பட்டி விமான ஓடுதளத்தை விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு அதனை விமான பயிற்சி மையமாக மாற்ற வேண்டி இருக்கும்.
குறைந்தது 10 பயிற்சி விமானங்கள் மற்றும் பிற விமான பயிற்சி செயல்பாடுகளுக்கு உகந்த இடமாக இதனை மாற்றுவதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க வேண்டிய பொறுப்பு இந்த நிறுவனத்திற்கு வழங்கப்படும். கோவில்பட்டி விமான ஓடுதளம் கோவில்பட்டி நகரத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இடம் இருப்பதால் இதனை விமான பயிற்சி தளமாக மாற்றுவது மிகவும் எளிதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
டிட்கோ ஒப்பந்த புள்ளி பெற்று நிறுவனம் இறுதி செய்யப்பட்டால், அந்த நிறுவனம் விமான பயிற்சி மையத்துக்கான அடிப்படை கட்டமைப்பு, மேம்பாட்டுக்கான மாஸ்டர் பிளான் , விரிவான பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசனை சேவைகள் ஆகியவற்றை வழங்க வேண்டும். பின்னர் இதன் அடிப்படையில் பணிகள் தொடங்கும்.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications