தமிழ்நாடு அடுத்தடுத்து வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்த்து வரும் வேளையில் மாநிலத்தின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு வளர்ச்சி மிகவும் பிரகாசமாக உள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலர் அளவை அடுத்த 6 ஆண்டுகளுக்குள் எட்ட, தற்போதைய வளர்ச்சி செயல்பாடுகள் போதாது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு துறைக்கும் தனிப்பட்ட வகையில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது மட்டும் அல்லாமல் இத்துறையைச் சார்ந்து தனிக் கொள்கையை வெளியிட்டு வருவதால் நீண்ட கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தற்போது டார்கெட் செய்துள்ளது பொன்னேரி.

சென்னை துறைமுகங்களை இணைக்கும் முக்கிய இடமாகப் பார்க்கப்படம் பொன்னேரி-யில் தமிழ்நாடு அரசு புதிய ஹெவி இன்ஜினியரிங் ஹப் அமைக்க முடிவு செய்துள்ளது. ஹெவி இன்ஜினியரிங் ஹப் மூலம் பெரிய பொறியியல் கருவிகள், எனர்ஜி துறை சார்ந்த கருவிகள், கனரக வாகனங்கள், ஹைட்ரஜென் உற்பத்தி ஆகிய பிரிவுகளைச் சார்ந்த நிறுவனங்களை ஈர்க்க திட்டமிட்டு உள்ளது.
இதற்காகத் தமிழ்நாடு அரசு சுமார் 653 ஏக்கரில் ஹெவி இன்ஜினியரிங் ஹப்-ஐ TIDCO அமைக்க உள்ளது. காட்டூர் கிராமப் பகுதிக்கு அருகில் அமைக்கப்படும் இந்த ஹப் சென்னையில் இருக்கும் 3 பெரிய துறை முகத்தை இணைப்பது மட்டும் அல்லாமல் சென்னை ரிங் சாலை, சித்தூர் எக்ஸ்பிரஸ் வே ஆகியவற்றையும் இணைக்கிறது.

தமிழ்நாடு எப்படிக் காலணி தயாரிப்புக்கும் ஏற்றுமதிக்கும் தனித் தொழிற்துறை பூங்காவை அமைத்து தைவான் நாட்டின் 4 பெரிய காலணி நிறுவனங்களை ஈர்த்து நீண்ட கால ஏற்றுமதிக்கும், வேலைவாய்ப்புகளுக்கு உத்தரவாதம் அளித்ததோ அதேபோல் தற்போது கனரகப் பிரிவில் இருக்கும் முன்னணி நிறுவனங்களை ஈர்க்க தயாராகியுள்ளது.
பொன்னேரி-யில் அமைக்கப்படும் இந்த ஹெவி இன்ஜினியரி ஹப்-க்கான 653 ஏக்கர் நிலத்தை மொத்தமாகக் கைப்பற்றும் பணிகள் முடிந்த நிலையில் தற்போது TIDCO நிறுவனங்களுக்கு நிலங்களைப் பெற்று தொழிற்சாலை அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த வாரம் நடக்க உள்ள நிலையில் பொன்னேரி ஹெவி இன்ஜினியரிங் ஹப் முக்கிய அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு ஏற்கனவே உற்பத்தி, ஏற்றுமதி என அனைத்திலும் சிறந்து விளங்கும் வேளையில் ஹெவி இன்ஜினியரிங் பிரிவு மூலம் அடுத்தகட்ட நகர்வை நோக்கி மாநிலத்தின் உற்பத்தித் துறை செல்கிறது. இன்று ஹெவி இன்ஜினியரிங் துறை மீது கவனம் செலுத்தும் தமிழ்நாடு அரசு விரைவில் தொழிற்துறை ரோபோடிக்ஸ் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications