ஓசூர் தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஒரு தொழில் நகரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஓசூரில் தான் டாடா நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி ஆலை செயல்படுகிறது. ஏதர், ஓலா உள்ளிட்ட நிறுவனங்களின் வாகன உற்பத்தி ஆலைகள், டிவிஎஸ், அசோக் லேலண்ட், டைட்டன் என பல்வேறு நிறுவனங்களும், ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் ஓசூரில் தொழில் புரிந்து வருகின்றன.
ஓசூர் நகரத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல இங்கே ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என அரசு முடிவு செய்தது. ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து மத்திய அரசுக்கும் அறிக்கையை அனுப்பி வைத்தது. ஆனால் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

இருந்தாலும் தமிழக அரசு ஓசூர் விமான நிலைய திட்டத்தில் பிடிவாதமாக இருக்கிறது. மீண்டும் இது தொடர்பான ஆய்வறிக்கையை அனுப்பும் பணிகளை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. டிட்கோ எனப்படும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குனரான சந்திப்பு நந்தூரி நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கான திருத்தி அமைக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்.
கூடிய விரைவில் திருத்தி அமைக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை டிட்கோ சார்பாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க போகிறோம் என அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். பாதுகாப்புத்துறை அமைச்சகம் குறிப்பிட்டு இருக்கும் அனைத்து தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் வகையில் புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏர்பேஸ் எனப்படும் வான்வெளி பரப்பு பயன்பாடு அடிப்படையில் முந்தைய திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததாகவும் ஆனால் அதற்கு ஒரு சாத்தியமான தீர்வு இருக்கிறது என்றும் சந்திப்பு நந்தூரி தன்னுடைய பேட்டியில் சுட்டிக்காட்டி இருக்கிறார். ஓசூர் விமான நிலையம் தொடர்பாக முதலில் அனுப்பி வைக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ள பிரச்சினை வான்வெளி அனுமதி தான். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்டுக்காக ஒதுக்கப்பட்ட வான்வெளியை பாதிக்காமல் ஓசூருக்கு வான்வெளி அனுமதி வழங்க முடியும் என்பதே எங்களின் நிலைப்பாடு என அவர் தெரிவித்திருக்கிறார்.
மீண்டும் நாங்கள் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம் இறுதி முடிவு எடுப்பது அவர்களின் கையில் தான் இருக்கிறது என அவர் கூறியிருக்கிறார். ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க சூளகிரி தாலுகாவில் இருக்கும் பேரிகை மற்றும் பாகலூர் பகுதியில் இடத்தை தேர்வு செய்துள்ளது அரசு. 2300 ஏக்கர் பரப்பளவில் அரசு விமான நிலையம் அமைக்க முடிவு செய்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது ஆனால் அந்த பகுதிக்கு உட்பட்ட வான்வெளி மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதை காரணமாக கூறி மத்திய அரசு இந்த விமான நிலைய திட்டத்திற்கு அனுமதி மறுத்தது. இந்த வான்வெளி பரப்பு ஹெச்ஏஎல் நிறுவனத்திற்கு தேவை என்றும் அதில் கூறியிருந்தது. இந்த நிலையில் தான் தமிழ்நாடு அரசு அதற்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து மீண்டும் அறிக்கையை அனுப்ப தயாராகி வருகிறது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications