தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் நாமக்கல் மாவட்டம், தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. 2023ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டபடி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் ராசிபுரத்தில் அமைக்கப்படவுள்ள டைடல் நியோ பூங்காவிற்கான வடிவமைப்பு மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கான ஈ-டெண்டர்களை வெளியிட்டுள்ளது டைடல் பார்க் நிர்வாகம். இந்த முயற்சி, தமிழ்நாடு முழுவதும் ஐடி துறையை விரிவாக்கம் செய்யும் தமிழ்நாடு அரசின் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் தான் முதல்வர் முக.ஸ்டாலின் சேலம் மாவட்டம் கருப்பூர்-க்கு அருகில் நியோ டைடல் பார்க் அமைத்தது, இதை தொடர்ந்து சேலம் - நாமக்கல் மாவட்டங்களுக்கு மத்தியில் இருக்கும் ராசிபுரத்தில் அடுத்த டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் தற்போது தமிழ்நாடு துவங்கியுள்ளது.
டெண்டர் விவரங்கள்: டைடல் பார்க் லிமிடெட், "தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வடிவமைப்பு, பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கான மின்-டெண்டர்"
விரிவான தகவல்கள் மற்றும் டெண்டரில் பங்கேற்பதற்கு, www.tntenders.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும் டைடல் அமைப்பு செய்தித்தாள் விளம்பரத்தில் தெரிவித்துள்ளது.
முழுமையாக நிரப்பப்பட்ட டெண்டர் ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 2024, நவம்பர் 11 ஆம் தேதி பிற்பகல் 3.00 மணி. டைடல் பார்க் லிமிடெட் எந்த காரணமும் கூறாமல் எந்த டெண்டரையும் ஏற்றுக்கொள்ளவோ/நிராகரிக்கவோ உரிமை கொண்டுள்ளது என்பதையும் செய்தித்தாள் விளம்பரத்தில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன. இதனால், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற விரும்பும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும், தொழில்நுட்ப முதலீட்டை ஈர்ப்பதற்காகவும் இந்த டைடல் பார்க் அமைக்கப்படுகிறது. இதன் மூலம், நாமக்கல் மாவட்டம் சமூக, பொருளாதார ரீதியாக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியின் வளாகத்தில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் இந்த டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையே நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிக்கும் வாய்ப்பு சற்று கூடுதலாகவே உள்ளது.
நாமக்கல் மாவட்டம் கோழிப்பண்ணைகள், தீவன உற்பத்தி, முட்டை உற்பத்தி, லாரி பாடி பில்டிங், ரிக், சரக்கு வாகன போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்கனவே சிறந்து விளங்கி வருகிறது. தற்போது அமைக்கப்படவுள்ள டைடல் பார்க், இந்தத் துறைகளின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில், தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை வழங்கும்.
இந்த டைடல் பார்க் திட்டம், நாமக்கல் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய பரிமாணத்தைச் சேர்க்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, நாமக்கல் மாவட்டத்தின் அடையாளத்தை மாற்றும் ஒரு முக்கியமான திட்டமாகும்.
இந்த ஈ-டெண்டர் செயல்பாட்டின் முடிவில், தகுதி வாய்ந்த ஆலோசனை நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும், அவர்கள் ராசிபுரம் டைடல் நியோ பூங்காவின் வடிவமைப்பு, கட்டுமான பணிகள் மற்றும் திட்ட மேலாண்மை ஆகியவற்றிற்கு வழிகாட்டுவார்கள். இதன் அடிப்படையில் டைடல் பார்க் கட்டுமானத்திற்கான டெண்டர் விடப்படும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications